Samantha: சமந்தாவை அப்படிப் பேசியிருக்கக்கூடாது; ஆனால் அவர் செய்தது தவறு- டாக்டர் விளக்கம்
கடந்த 2022ம் ஆண்டு மயோசைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, நீண்ட நாள்கள் வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு நீண்ட நாள்கள் ஓய்விற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
இதையடுத்து மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாட்காஸ்ட் மற்றும் நேர்காணல்களில் தொடர்ந்து பேசிவருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவ்வப்போது சில மருத்துவ முறைகளைப் பரிந்துரைத்து வருகிறார்.
Ms. Samantha Ruth Prabhu has responded to my "provocative" criticism of her endorsement of unscientific, pseudoscientific and baseless alternative medicine therapies by playing the victim card and endorsing more alternative practices.
— TheLiverDoc (@theliverdr) July 5, 2024
Please note, she is a serial offender in… https://t.co/eRvsXrGlZq pic.twitter.com/iRadZgrHTE
அந்த வகையில் சமீபத்தில், ஹைட்ரஜன் பெராக்ஸைடை (inhale hydrogen-peroxide) நெபுலைஸரில் பயன்படுத்தி சுவாசித்தால் சாதாரண வைரல் ஃபீவர் போய் விடும் என்றும் தேவையில்லாமல் பழைய மாத்திரைகளை எடுக்க வேண்டாம் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றைப் பதிவிட்டிருந்தார் சமந்தா. இது சமூக வலைதளங்களில் வைரலாக இதைக் கண்ட மருத்துவத் துறை சார்ந்த பலரும் சமந்தா சொல்லும் இந்த inhale hydrogen-peroxide முறை ஆபத்தானது என்றும் மருத்துவம் பற்றித் தெரியாமல் தவறான மருத்துவ முறைகளை சமந்தா இப்படி பிரபலப்படுத்தி ரசிகர்களுக்குத் தவறான வழியைக் காட்ட வேண்டாம் என்று கண்டித்திருந்தனர்.
அதில் குறிப்பாக, The Liver Doc என்ற சமூக வலைதளப் பக்கத்தில் டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்பவர், "பிரபல இந்திய நடிகையான சமந்தா ரூத், மருத்துவம், உடல்நலம் மற்றும் அறிவியல் பற்றிய அறிவில்லாதவர். சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கான ஃபாலோவர்ஸை கொண்ட அவர், சுவாச வைரஸ் தொற்றுகளைத் தடுக்க ஹைட்ரஜன் பெராக்சைடை (inhale hydrogen-peroxide) சுவாசிக்கச் சொல்லி பரிந்துரை செய்கிறார்.
அமெரிக்காவின் The Asthma and Allergy Foundation என்ற பிரபல மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஹைட்ரஜன் பெராக்சைடை நெபுலைஸரில் சுவாசிக்க வேண்டாம், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என்று அறிவுறுத்தியிருக்கிறது. அப்படி இருக்கையில் சமந்தா மருத்துவம் பற்றிய அறிவில்லாமல் தவறான மருத்துவ முறையை விளம்பரப்படுத்தக் கூடாது. நீண்ட ஆண்டுகளாகத் தவறான மருத்துவ முறை மற்றும் மருத்துவம் பற்றிப் பரவும் வதந்திகளைத் தெளிவுபடுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் போராடி வருகிறேன் நான். பிரபல நடிகை இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது" என்று தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், மருத்துவத் துறை சார்ந்த பலரும் இந்த ஹைட்ரஜன் பெராக்சைடை நெபுலைஸ் பயன்படுத்தி சுவாசிக்கும் முறை நுரையீலைப் பாதிக்கும் என்று கூறி வந்தனர்.
சமூக வலைதளங்களில் பரவிய இந்த கண்டனத்திற்குப் பதிலளித்திருந்த சமந்தா "மருத்துவ பொருட்களைப் பயன்படுத்துவது, பரிந்துரைப்பது தொடர்பாக இதற்கு முன் நான் சில தவறுகள் செய்தது உண்மைதான். அவையெல்லாம் முழுமையாக எனக்குத் தெரியாமல் செய்த தவறுகள். உண்மை தெரிந்த பிறகு அதுபோன்ற விஷயங்களை விளம்பரப்படுத்துவதை முற்றிலும் நிறுத்திவிட்டேன். இப்போது விழிப்புணர்வுடன் இருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
I have been fighting medical/health misinformation for the longest time and it just does not seem to end. I have come to understand that the only way to fight medical misinformation is to consistently speak about it and make examples of people who mislead and misinform.
— TheLiverDoc (@theliverdr) July 6, 2024
Many… pic.twitter.com/YQBHD2Fgq4
இந்நிலையில் The Liver Doc தனது எக்ஸ் தளத்தில், "மனம் புண்படும் வகையில் நடிகை சமந்தா பற்றி குறிப்பிட்டுப் பேசியிருந்தால் நான் மிகவும் வருந்துகிறேன். சமந்தா எந்த தவறான உள்நோக்கத்துடனும் இதைச் செய்யவில்லை என்று தெரியும். இருப்பினும், பிரபலமாக இருக்கும் சமந்தா தவறான மருத்துவ முறையைப் பரிந்துரைத்தால் அது பிரபலமாகி பலரும் அதைப் பயன்படுத்தி பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து இருப்பதால் அதைக் கண்டிக்க வேண்டியிருந்தது. நான் பல ஆண்டுகளாக தவறான மருத்துவ முறை மற்றும் மருத்துவம் பற்றி பரவும் வதந்திகளைத் தெளிவுபடுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் போராடி வருகிறேன். அதனால் இது போன்ற தவறான மருத்துவ முறைகள் சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களிடம் பரவுவதைத் தடுக்கவே கொஞ்சம் கடுமையாகப் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
மற்றபடி, நடிகை சமந்தாவை மருத்துவம் பற்றிய அறிவில்லாதவர் என்று குறிப்பிட்டு காயப்படுப்படுத்துவது எனது நோக்கமல்ல. பிரபலமாக இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் எதையும் விளம்பரப்படுத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

