Dhoni: `Kaptaan Sahab வீட்டிற்கு அழைத்து வந்து நள்ளிரவில் சர்ப்ரைஸ் கொடுத்த சல்மான் கான்!
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு இன்று 43வது பிறந்த நாள். மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளை தனது வீட்டில் கொண்டாட நடிகர் சல்மான் கான் முடிவு செய்தார். இதற்காக தோனியிடம் தனது வீட்டிற்கு வரும்படி சல்மான் கான் கேட்டுக்கொண்டார்.
நேற்று மாலை தோனியும் அவரது மனைவி சாக்ஷியும் மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டிற்கு வந்திருந்தனர். மும்பை பாந்த்ராவில் உள்ள சல்மான் கான் வீட்டில் இரவு 12 மணிக்கு தோனியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதற்காக சல்மான் கான் சிறப்பு கேக்கிற்கு ஆர்டர் செய்திருந்தார். தோனி அந்த கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை சல்மான் கான் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். தோனியின் நிக்நேமை குறிப்பிட்டு சல்மான் கான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் கப்தான் சாஹேப் என்று தெரிவித்தார்.
தோனியை Kaptaan Sahab என்று செல்லமாக அழைப்பது வழக்கம். எனவேதான் அந்த பெயரை சொல்லி தோனிக்கு சல்மான் கான் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதில் சல்மான் கான் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.
பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ சோசியல் மீடியாவில் பரவியதை தொடர்ந்து நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துக்களை பகிர்ந்தனர். சிலர் இரண்டு டைகர்கள் என்று குறிப்பிட்டனர். ஒருவர் இந்த இரண்டு நட்சத்திரங்களை விட இந்தியாவில் வேறு பெரிய நட்சத்திரங்கள் வேறு யாரும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் ஆனந்த் அம்பானியின் திருமண சங்கீத நிகழ்ச்சியில் சல்மான் கானும், தோனியும் சேர்ந்து கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

