தூத்துக்குடி: வாய்த்தகராறு; செல்போன் உடைப்பு... இளைஞரை கொலை செய்து உடலை புதைத்த இளம்சிறார்கள்

தூத்துக்குடி, மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் களஞ்சியம். இவரின் மனைவி கணேஸ்வரி. இவர்களின் மகன் மாரிச்செல்வம். மீனவரான இவர் கந்த 21-ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து அவரின் சகோதரி மாரீஸ்வரி, தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த 17வயது சிறுவன் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் 4  சிறுவர்களுடன் சேர்ந்து மாரிச்செல்வத்தை கொலை செய்தது தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்ட மாரிச்செல்வம்

அச்சிறுவனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், “மாரிச்செல்வம் அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து எங்களில் ஒருவரை அடித்தார். பின்னர் சமாதானம் ஆகினோம். கடந்த 20-ம் தேதி நாங்கள் கடற்கரைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எங்கள் மீது கல் எடுத்து வீசினார். எங்களுக்கும் மாரிச்செல்வத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மாரிச்செல்வத்தின் செல்போனை ஒருவர் உடைத்துவிட்டார். பதிலுக்கு எங்களில் ஒருவரது செல்போனை பறித்து கடலில் வீசிவிட்டார். அவரை கொலை செய்ய திட்டம் போட்டோம்.

21-ம் தேதி திரேஸ்புரம் உப்பு சங்க அலுவலகம் பின்புறம் மாரிச்செல்வம் நடந்து சென்று கொண்டிருந்தார். நாங்கள் 4  பேரும் செங்கலால் அவரது தலையில் அடித்தோம். அடித்ததில் மயங்கி விழுந்துவிட்டார். அவரது கை, கால்களை கயிற்றால் கட்டி அங்கேயே குழி தோண்டி புதைத்துவிட்டோம். மாரிச்செல்வத்தை கொலை செய்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என எங்களுக்குள் முடிவு எடுத்தோம். ஆனால், போலீஸார் எப்படியோ கண்டுபிடித்து விட்டனர்.” எனச் சொல்லி போலீஸாரையே அதிர வைத்தான் அச்சிறுவன்.

தாளமுத்துநகர் காவல் நிலையம்

இதனையடுத்து மாரிச்செல்வத்தை புதைக்கப்பட்ட இடத்தை அச்சிறுவன் அடையாளம் காட்டினான்.  அவர் இறந்து 15 நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. சம்பவ இடத்திலேயே மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.  தற்போது இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே ஒரு சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.