``ஜூலை 13-ல் இந்த சேவைகளை பயன்படுத்த முடியாது வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி பேங்க் தனது வாடிக்கையாளர்களால் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சேவைகளை பயன்படுத்த முடியாது என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி பேங்க் தனது தொழில்நுட்ப அமைப்புகளை மேம்படுத்துகிறது. இந்த தொழில்நுட்ப மேம்பாடு நடைபெறும் நேரத்தில் ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களால் குறிப்பிட்ட சில சேவைகளை பயன்படுத்த முடியாது.

ஜூலை 13-ம் தேதி அதிகாலை 3 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஹெச்.டி.எஃப்.சி பேங்க் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. இந்த நேரத்தில் மட்டும் வாடிக்கையாளர்களால் சேவைகளை பயன்படுத்த முடியாது. ஜூலை 13-ம் தேதி மாதத்தின் இரண்டாம் சனிக் கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.டி.எம் கார்டு பரிவர்த்தனை...

குறிப்பிட்ட நேரத்தில் எந்தெந்த சேவைகளை பயன்படுத்த முடியும்?

  • ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

  • ஹெச்.டி.எஃப்.சி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்துகொள்ளலாம்.

  • ஹெச்.டி.எஃப்.சி பேங்கின் PayZapp வாயிலாக ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம்.

யு.பி.ஐ

எந்தெந்த சேவைகளை பயன்படுத்த முடியாது?

  • நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் ஆகிய சேவைகளை அதிகாலை 3 மணி முதல் மாலை 4:30 மணி வரை பயன்படுத்த முடியாது.

  • அதிகாலை 3 மணி முதல் 3:45 மணி வரையிலும், காலை 9:30 மணி முதல் பகல் 12:45 மணி வரையிலும் யு.பி.ஐ (UPI) சேவைகளை பயன்படுத்த முடியாது.

  • மற்றவர்களுக்கு பணம் அனுப்ப (Money transfer) முடியாது.

  • Forex Card மற்றும் INR Card சேவைகளை அதிகாலை 3 மணி முதல் 3:45 மணி வரை பயன்படுத்த முடியாது.

எனவே, ஹெச்.டி.எஃப்.சி பேங்க் வாடிக்கையாளர்கள் இதற்கு ஏற்ப முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.