உ.பி:பள்ளியின் பெண் முதல்வரை கட்டாயப்படுத்தி இருக்கையிலிருந்து அகற்றிய பிஷப் தரப்பு - வீடியோ சர்ச்சை
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் என்ற இடத்தில் செயல்படும் பிஷப் ஜான்சன் பெண்கள் பள்ளியில் பாருல் பல்தேவ் என்ற பெண் முதல்வராக இருந்து வந்தார். அவருக்கு சில ஆசிரியர்கள் மற்றும் லக்னோ மறைமாவட்ட தரப்பில் எதிர்ப்பு இருந்ததாக தெரிகிறது. ஆனால் பாருல் பல்தேவ், முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மறுத்து தொடர்ந்து பணியில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று, திடீரென லக்னோ பிஷப் மோரீஸ், முதல்வர் அறை கதவை திறந்துகொண்டு அத்துமீறி உள்ளே நுழைந்தார். அவருடன் சில ஆசிரியர்களும் இருந்தனர். பிஷப் முதல்வர் பல்தேவிடம் முதல்வர் பதவியில் இருந்து விலகும்படி கேட்டுக்கொண்டார். அவர்களின் நடவடிக்கையை பல்தேவ் தனது மொபைல் போனில் வீடியோ எடுக்க முயன்றார். உடனே அவரது கையில் இருந்த மொபைல் போனை பிஷப் பிடுங்க முயன்றார். ஆனால் பல்தேவ் போனை கொடுக்க மறுத்தார்.
உடனே அங்கு நின்ற பெண் ஆசியர்கள் சிலர் முதல்வர் பல்தேவிடமிருந்து மொபைல் போனை பிடுங்க முயன்றார். அப்படியும் போனை கொடுக்காமல் இருக்கையில் இருந்தும் எழும்பாமல் இருந்தார். உடனே இருக்கையோடு அப்படியே அந்த இடத்தில் இருந்து முதல்வர் பல்தேவை அங்கிருந்து வெளியில் இழுத்தனர். அப்படியும் அவர் இருக்கையில் இருந்து எழும்பவில்லை. அவரை கட்டாயப்படுத்தி இருக்கையில் இருந்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் பிஷப் வேறு ஒருவரை முதல்வராக இருக்கையில் அமர வைத்தார். முதல்வர் அறைக்குள் நடந்த இந்நிகழ்வுகளை யாரோ வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மறைமாவட்டத்துக்கு நடைபெற்ற தேர்தலில் தற்போதைய பிஷப் மோரீஸ் எட்கர், முதல்வர் பதவியில் இருந்து கட்டாயப்படுத்தி நீக்கப்பட்ட பாருல் பல்வேவ் தந்தை பிஷப் பீட்டர் பல்தேவை தோற்கடித்தார். அதனை தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து விலகும்படி பாருல் பல்தேவுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. பாருல் பல்தேவ் இது தொடர்பாக பிஷப் உள்ளிட்டோர் மீது புகார் அளித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

