ஜாதியை பேசிய இயக்குனர்! கடுப்பான விஜய்சேதுபதி.. என்ன செய்தார் தெரியுமா?

Vijaysethupathi: தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இப்போது அவர் தன்னுடைய ஐம்பதாவது படமான மகாராஜா படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அந்த படம் நாளை திரையரங்கம் முழுவதும் ரிலீசாக இருக்கின்றது .இந்த படத்தை நித்திலன் சுவாமிநாதன் என்பவர் இயக்கியிருக்கிறார்.

விஜய் சேதுபதியை பொறுத்தவரைக்கும் கடினமான உழைப்பாளி என்பதற்கு ஒரு உதாரணமாக இருப்பவர். அதன் விளைவு பாலிவுட்டிலும் பாலிவுட் நடிகர்களுடனும் இணைந்து நடிக்கும் அளவுக்கு அவருடைய வளர்ச்சி இன்று உயர்ந்து நிற்கிறது .தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி என எல்லா மொழிகளிலும் கால் பதித்து வருகிறார் விஜய் சேதுபதி .

இதையும் படிங்க:  விஜய் கட்சியில் இணையும் ராகவா லாரன்ஸ் – பாலா?!.. பரபர அப்டேட்!…

அவருடைய கால் சீட்டுக்காக பல பேர் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இருந்தாலும் அவர் கதைகளை தேர்ந்தெடுக்கும் விதம் முற்றிலும் வித்தியாசமாகவே இருக்கின்றது. இந்த மகாராஜா திரைப்படத்தில் அவர் ஒரு முடி திருத்தும் தொழிலாளியாக நடித்திருக்கிறார். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய  நித்திலன் சுவாமிநாதன் தான் இந்த படத்தை இயக்கியவர்,

இதனுடைய பத்திரிகையாளர் காட்சி சமீபத்தில் தான் திரையிடப்பட்டது. அதில் படத்தை பார்த்த பல பேர் பாராட்டி இருக்கின்றனர். முடி திருத்தும் தொழிலாளியாக அதாவது மகாராஜா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் விதம் அனைவரையும் பாராட்ட வைத்திருக்கிறது. இந்த நிலையில் இன்று பத்திரிக்கையாளரை சந்தித்து பேசிய விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் பல விஷயங்களை பகிர்ந்தார்கள்.

இதையும் படிங்க:  தளபதியோட எல்லா சீன்லயும்! ‘கோட்’ படத்தை பற்றி சினேகா கொடுத்த அப்டேட்

அதில்  நித்திலன் சுவாமிநாதனிடம் படத்திற்கு இப்படி ஒரு பெயர் எப்படி வைத்தீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நித்திலன் சுவாமிநாதன் பெயர் வைப்பதில் ஒரு முரண்பாடு இருந்தால் தான் அதில் ஒரு சுவாரசியம் இருக்கும். எப்படி திருடனை போலீஸ் என சொல்கிறோமோ அதைப்போல பார்பர் மகாராஜா ஆகிறார்.

பார்பர் மகாராஜா கேட்கும் போது எப்படி இருக்கிறது ?என நித்திலன் கூறினார். இதை கேட்டதும் பத்திரிக்கையாளர்கள் ஜாதியை பேசுறீங்க அண்ணே என சத்தம் போட உடனே குறிக்கிட்டு பேசிய விஜய் சேதுபதி நித்திலன் சுவாமிநாதனை கொஞ்ச நேரம் பொறு என சொல்லிவிட்டு இதில் ஒரு ஃபன் இருக்கும்.

இதையும் படிங்க:  என் ராசாவின் மனசிலே படத்தில் இளையராஜா செய்த மேஜிக்!. மிரண்டு போன ராஜ்கிரண்!…

அதாவது திருடனுக்கு போலீஸ்காரன் என பெயர் வைத்தால் எப்படி ஒரு வேடிக்கை இருக்கிறதோ அதைப்போல தான் இந்த பெயரிலும் ஒரு ஃபன் இருக்கிறது. அதைத்தான் அவர் சொல்ல வருகிறார். வேறு எதுவும் இல்லை என விஜய் சேதுபதி கூறினார். உடனே அருகில் இருந்த நிருபர்கள் சேது அண்ணன் காப்பாத்திட்டீங்க என கிண்டல் அடித்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.