T20 World Cup 2024: 75 நாள்கள்; ரூ.250 கோடி; போட்டிகள் முடிந்த பின்னர் இடிக்கப்பட்ட ஸ்டேடியம்!

2024 டி20 உலகக் கோப்பைக்காகக் கட்டப்பட்ட அமெரிக்க ஸ்டேடியம் புல்டோசர்கள் கொண்டு அகற்றப்பட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்துகின்றன. 2024 டி20 உலகக் கோப்பைக்காக அவசர அவசரமாகக் கடந்த 5 மாதத்தில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டது.

நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்

இதுவரை அந்த ஸ்டேடியத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி உட்பட எட்டு போட்டிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஸ்டேடியம் டி20 உலகக் கோப்பை நடத்துவதற்காகக் கட்டப்பட்ட தற்காலிக மைதானம் ஆகும். நேற்று நடைபெற்ற இந்தியா - அமெரிக்கா இடையிலான போட்டியே இங்கு இறுதிப் போட்டியாக அமைந்தது.

இதற்குப் பிறகு இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாது. அதனால் முழுக்க முழுக்க டி20 உலகக் கோப்பைக்காக மட்டுமே அமைக்கப்பட்ட இந்த ஸ்டேடியம் புல்டோசர்கள் கொண்டு அகற்றப்பட்டு வருகிறது. அந்த வீடியோக்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்

சுமார் 35,000 பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்ட இந்த ஸ்டேடியம் 75 நாள்களில் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.