நிறைய பணம் சம்பாதித்து கோடீஸ்வரராக வாழ பிள்ளையார் வழிபாடு

கடினமாக உழைத்தால் மட்டும் ஒரு மனிதரால் பணக்காரனாகி விட முடியாது. புத்திசாலித்தனத்தோடு உழைக்க வேண்டும். திறமையாக செயல்படும் போது தான் ஒரு மனிதனுக்கு செல்வம் மேலும் மேலும் சேரும். இது ஒரு பக்கம் இருக்க கடுமையாக உழைத்து திறமையாக செயல்பட்டு, பணத்தை ஈர்க்க முடியாதவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும்.

இப்படி கடின உழைப்பு திறமை அதிர்ஷ்டம் எல்லாம் ஒரு சேர கை கொடுக்க வேண்டும், வாழ்க்கையில் சீக்கிரம் பணக்காரராக வேண்டும் என்றால் ஒரு சில ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களை செய்யலாம். அதற்கு ஒரு எளிமையான விநாயகர் வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெள்ளிக்கிழமை தொடர்ந்து இப்படி விநாயகர் வழிபாட்டை செய்பவர்களுக்கு நிச்சயம் பணக்கஷ்டம் தீரும். செல்வ வளம் பெருகும். வீட்டில் தன தானியம் ஊற்றெடுக்கும் அது என்ன வழிபாடு பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாடு

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். அதுவும் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் தான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் வரக்கூடிய சுக்கிர ஹோரை நேரத்தில் அரச மரத்தடி பிள்ளையாரை 108 முறை வலம் வர வேண்டும்.

இப்படி பிள்ளையாரை சுற்றி வரும்போது ‘ஓம் லக்ஷ்மி கணபதயே நமோ நமஹ’ என்ற இந்த மந்திரத்தை சொல்லி உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டு பக்கத்தில் அரச மரத்தடி பிள்ளையார் இல்லை என்றால், வீட்டு பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பிள்ளையார் கோவிலுக்கு சென்று 16 மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் போட்டு, அந்த பிள்ளையாரை 108 முறை வலம் வர வேண்டும்.

அரச மரத்தடி விநாயகரை வலம் வந்தாலும் சரி, கோவிலில் இருக்கும் விநாயகரை வலம் வந்தாலும் சரி, 108 முறை மேல் சொன்ன மந்திரத்தை மனதிற்குள்ளேயே சொல்லி இந்த வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயமாக உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் தீரும் என்பது நம்பிக்கை. ஒரே ஒரு வெள்ளிக்கிழமையை செய்து விட்டு பல கோடி பணம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்து வாருங்கள். படிப்படியாக உங்கள் பண கஷ்டம் குறைவதை உணர்வீர்கள். படிப்படியாக உங்களுடைய வருமானம் உயர்வதற்கு என்னென்ன வழிகள் தேவையோ அதை எல்லாம் அந்த விநாயகர் உங்களுக்கு காட்டிக் கொடுப்பார். அது மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எவ்வளவோ தடைகள் வந்து முட்டுக்கட்டை போடும்.

இதையும் படிக்கலாமே: போட்டி பொறாமை, கண் திருஷ்டி விலக வெண்கடுகு பரிகாரம்

அதை எல்லாம் உடைத்தெறிய கூடிய சக்தியும் இந்த வழிபாட்டிற்கு உண்டு. வெள்ளிக்கிழமை மதியமும் மாலையும் கூட சுக்கிர ஹோரை வரும். ஆனால் மதியம் 12 மணிக்கு மேல் அரச மரத்தை சுற்றக்கூடாது என்பது முன்னோர்களின் கருத்து. அதனால் காலையிலேயே இந்த வழிபாட்டை மேற்கொள்ளவும். விக்னங்களை தீர்க்கும் விநாயகர் உங்கள் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

The post நிறைய பணம் சம்பாதித்து கோடீஸ்வரராக வாழ பிள்ளையார் வழிபாடு appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.