துரதிர்ஷ்டம் விலக பரிகாரம்

எல்லோருக்குமே தங்களுடைய வீட்டில் இருக்கும் துரதஷ்டம் விலகிச் செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் வேண்டாம் வேண்டாம் என்று விரட்டி அடித்தாலும், ஏனோ தெரியவில்லை இந்த துரதிஷ்டம் மட்டும் நம்முடைய வீட்டில் நிரந்தரமாக தங்கி நம் வீட்டை சின்னாபின்னம் ஆக்குகிறது. இந்த தரித்திரத்திலிருந்து விடுபடுவதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்.

வெள்ளிக்கிழமை எல்லோராலும் செய்யக்கூடிய வகையில் ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தண்ணீரை காலை எழுந்தவுடன் நிலை வாசல் படியில் தெளித்தால் போதும். வீட்டை பிடித்த அத்தனை தரித்திரமும் விலகும் வீட்டிற்குள் மகாலட்சுமி கடாட்சம் நுழையும்.

துரதிர்ஷ்டத்தை விரட்டி அடிக்கும் தீர்த்தம்

முந்தைய நாளே ஒரு எலுமிச்சம் பழம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து வாசலில் கூட்டி கோலம் போடும் வழக்கம் எல்லோர் வீட்டிலும் இருக்கும். வாசல் தெளிக்கும் தண்ணீரில் கொஞ்சமாக எலுமிச்சை பழச்சாறு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு கலந்து நிலை வாசல் தெளித்து கோலம் போட்டு விடுங்கள்.

கோலத்திற்கு நடுவே கொஞ்சமாக மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும். நிலை வாசல் படியில் கோலம் போட்டு, நிலை வாசல் படியை துடைத்து மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிகாரத்தை செய்தாலே உங்கள் வீட்டை பிடித்த தரித்திரம் பாதி விலகும். எலுமிச்சம் பழ சாறுக்கு அத்தனை ஒரு ஆக்ரோஷமான சக்தி இருக்கிறது.

வீட்டிற்குள் எந்த கெட்ட சக்தியையும் நுழைய விடாது. மறக்காம வெள்ளிக்கிழமை காலையில் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். பிறகு வீட்டிற்குள் வந்து நீங்கள் குளித்து முடித்துவிட்டு சமைத்து எல்லா வேலையையும் செய்து கொள்ளுங்கள். பிறகு வெள்ளிக்கிழமை பூஜை செய்வதற்கு முன்பாக உங்கள் வீடு சுத்தமாகத்தான் இருக்கும்.

அந்த சமயத்தில் ஒரு சின்ன டம்ளரில் சுத்தமான தண்ணீர் எடுத்துக்கோங்க. அதில் 2 துளசி இலைகளை போட்டு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு இதில் கொஞ்சமாக எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலந்து, அருகம்புல் கொண்டு இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். வீட்டின் மூளை முடுக்குகளில் நன்றாக இந்த தண்ணீர் பட வேண்டும்‌.

இந்த எலுமிச்சம் பழம் கலந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்தால் வீட்டில் இருக்கும் துரதிஷ்டம் வீட்டை விட்டு வெளியேறிவிடும். துரதிஷ்டம் நிலையாக வீட்டில் தங்காது. தரித்திரம் நீங்கி வீட்டிற்குள் செல்வா கடாட்சம் தங்கும். மகாலட்சுமியே உங்கள் வீட்டில் குடி வந்து அமர்ந்து மனநிறைவான வாழ்க்கையை கொடுப்பாள் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: நிறைய பணம் சம்பாதித்து கோடீஸ்வரராக வாழ பிள்ளையார் வழிபாடு

எலுமிச்சம் பழத்துக்கு ரொம்ப ரொம்ப நல்ல சக்தி இருக்குதுங்க வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் விலக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இந்த தீர்த்தத்தை தெளித்துப் பாருங்கள். வாழ்க்கையில் நிச்சயம் அபரிவிதமான வெற்றியை காண்பீர்கள். எளிமையான பரிகாரம் என்று நினைக்காமல் சக்தி வாய்ந்த பரிகாரம் என்று நினைத்து இதை செய்பவர்களுக்கு நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

The post துரதிர்ஷ்டம் விலக பரிகாரம் appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.