திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்த வெஸ்ட் இண்டீஸ்!

உலக கோப்பை டி20 போட்டிகளில் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.உலக கோப்பை டி20 போட்டிகளின் லீக் ஆட்டங்கள் அமெரிக்காவில் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி அமெரிக்காவுடன் இணைந்து நடத்துகிறது. இந்த போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி டீம்-சியில் ஆப்கானிஸ்தான், உகாண்டா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளுடன் விளையாடி வருகிறது.

ஏற்கனவே 2 போட்டிகளை வென்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் தற்போது நியூசிலாந்துடன் நடந்த போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகளிலுமே வென்று 6 புள்ளிகளுடன் டீம்-சியில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் சூப்பர் 8 சுற்றுக்கான தகுதி பெற்ற அணியாகவும் மாறியுள்ளது.

இதே வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை ஒருநாள் போட்டிகளுக்கான தகுதி சுற்றில் படுதோல்வி அடைந்து லீக் போட்டிக்கு கூட செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. தற்போது அந்த மிகப்பெரிய சரிவிலிருந்து மீண்டு வந்து சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

Edit by Prasanth.K

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.