போட்டி பொறாமை, கண் திருஷ்டி விலக வெண்கடுகு பரிகாரம்

ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருப்பது மற்றவர்களின் போட்டி பொறாமை. அதோடு மட்டுமல்லாமல் கண் திருஷ்டி போன்ற எதிர்மறை ஆற்றல்கள் தான். இந்த எதிர்மறை ஆற்றல்கள் ஒருவருக்கு வந்து விட்டாலே அவரால் எந்தவித முன்னேற்றத்தையும் காண முடியாது. அதையும் மீறி அவர் முன்னேறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டாலும் அதில் பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகள் ஏற்படும். தடைகள் உண்டாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் செய்யக்கூடிய எளிமையான பரிகாரங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வெண்கடுகு பரிஹாரம்

நம்மிடம் இருக்கக்கூடிய பல பொருட்கள் மருந்தாகவும் மகத்துவம் நிறைந்ததாகவும் திகழ்கிறது. அப்படி திகழக்கூடிய சில பொருட்களை நாம் முறையாக பயன்படுத்தினோம் என்றால் நம்மை தொடர்ந்து வந்து கொண்டிருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகி ஓடும் என்றே கூற வேண்டும். அதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு பொருளாக திகழ்வதுதான் வெண்கடுகு.

வெண்கடுகை வைத்து பல பரிகாரங்கள் இருக்கின்றன. இந்த பரிகாரங்கள் அனைத்துமே நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை விலக்கக்கூடிய ஒன்றாக தான் இருக்கிறது. நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகி விட்டாலே நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு உண்டாகும். தொட்டதெல்லாம் துலங்கும். இந்த பதிவில் வெண்கடுகை வைத்து செய்யக்கூடிய பரிகாரங்களை பற்றிதான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக வெண்கடுகை சாம்பிராணி தூபம் போட்டு வீடு முழுவதும் காட்டுவார்கள். அவ்வாறு சாம்பிராணி தூபம் போடக்கூடிய நாட்களாக கருதப்படுவது செவ்வாய்க்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் தான். செவ்வாய்க்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் வீட்டில் இருக்கக் கூடிய அனைத்து மூலை முடுக்குகளிலும் இந்த வெண்கடுகை சாம்பிராணி தூபமாக போட்டு காட்ட வேண்டும். இப்படி காட்டுவதன் மூலம் வீட்டிற்குள் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகும் என்று கூறப்படுகிறது.

அதிகப்படியான எதிர்மறை ஆற்றல்கள் இருக்கிறது என்றாலோ வீட்டிற்குள் நுழையவே பிடிக்கவில்லை என்பவர்கள் தங்களுடைய வீட்டில் வெண்கடுகை தூவி விட வேண்டும். இந்த வெண்கடுகை 24 மணி நேரம் அப்படியே வீட்டிற்குள் இருக்கட்டும். 24 மணி நேரம் கழித்து இந்த வெண்கடுகை சுத்தமாக பெருக்கி அள்ளி மூன்று தெருக்கள் சந்திக்கும் முச்சந்தியில் கொண்டு சென்று போட்டு விட வேண்டும். இந்த வழிமுறையை தொழில் செய்யும் ஸ்தாபனங்களிலும் நாம் செய்யலாம்.

இப்படி 24 மணி நேரமும் வெண்கடுகு வீட்டிற்குள் இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று நினைப்பவர்கள், ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாளத்தில் வெண்கடுகை பரப்பி அதற்கு மேல் இரண்டு அகல் விளக்குகளை வைத்து தீபம் ஏற்றி உங்களுடைய நிறைவாசலில் வைத்து விட வேண்டும். தினமும் இப்படி தீபம் ஏற்றி வைப்பதன் மூலம் வீட்டிற்குள் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகும் என்று கூறப்படுகிறது.

எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் வராமல் இருப்பதற்கு இரண்டு வெண்கடுகை வீட்டு நிலை வாசலிலவாசலின் வெளிப்புறத்தில் வராகி அம்மன், காலபைரவர், நரசிம்மர், பிரத்யங்கரா தேவி போன்ற உக்கிர தெய்வங்களில் ஏதாவது ஒரு தெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு போட வேண்டும். இப்படி தினமும் போடுவதன் மூலமும் வீட்டிற்குள் எந்தவித எதிர்மறை ஆற்றல்களும் வராது.

இதோடு மட்டுமல்லாமல் அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களில் சிவப்பு நிற துணியில் வெண்கடுகை வைத்து மூட்டையாக கட்டி வீட்டின் நிலை வாசலில் கட்டி வைப்பதன் மூலமும் வீட்டிற்குள் எந்தவித எதிர்மறை ஆற்றல்களும் ஏற்படாது.

இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் வர பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த பரிகாரங்களில் விருப்பம் இருப்பவர்கள் முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரங்களில் ஏதாவது ஒன்றையாவது செய்து வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களையும் நீக்கிக் கொள்ளலாம்.

The post போட்டி பொறாமை, கண் திருஷ்டி விலக வெண்கடுகு பரிகாரம் appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.