ஒட்டுமொத்த கண் திருஷ்டியையும் ஒழித்துக்கட்டும் பரிகாரம்

ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் முன்னேற்ற தடைகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும், அதில் முதல் காரணமாக இருப்பது கண் திருஷ்டி தான். அடுத்தவர்கள் பொறாமை எண்ணத்தோடு ஏக்கத்தோடு ஒரு பார்வை பார்த்தால் போதும். அந்த பார்வைக்கு சக்தி மிக மிக அதிகம். நன்றாக வாழ்பவர்களையும் வீழ்த்தும் அளவுக்கு கொடூரமான சக்தி கண் பார்வைக்குள் மறைந்திருக்கிறது.

எல்லோருடைய பார்வையும் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு முடிவுக்கு நம்மால் வர முடியாது. ஆனால் ஒரு சிலருடைய பார்வை ஒரு சிலருடைய வாழ்க்கையை அழிக்கும். இப்படி பட்ட கொடுமையான கண் திருஷ்டியால் பாதிப்புகள் வந்தால் என்னென்ன அறிகுறிகள் தெரியும்‌. இந்த அறிகுறிகளை கொடுக்கும் கண் திருஷ்டியை எப்படி நீக்குவது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கண் திருஷ்டி விலக எளிய பரிகாரம்

முதலில் உங்களுடைய உடம்பு அடித்துப் போட்டது போல வலிக்கும். கொட்டாவி வரும். தூக்கம் வரும். எந்த ஒரு வேலையிலும் ஆர்வம் காட்ட முடியவே முடியாது. இரண்டாவதாக எதையோ சிந்தித்து அழுது கொண்டே இருப்பீர்கள். தேவையில்லாமல் கண்ணீர் வந்தாலும் அதற்கு காரணம் கண் திருஷ்டி தான். மூன்றாவதாக அடுத்தடுத்த இழப்புகளை சந்திப்பீர்கள். ஏதோ ஒரு இழப்பு, அது கணவன் மனைவி பிரிவாக இருக்கலாம்.

பிள்ளைகள் உங்களை விட்டு தூரமாக செல்லக்கூடிய சூழ்நிலை உண்டாகலாம், பண நஷ்டம் ஏற்படலாம், பொருள் நஷ்டம் ஏற்படலாம், ஏதாவது ஒரு பொருளை தொலைப்பதற்கு கூட வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் உங்களை தொடரும் பட்சத்தில் ஏதோ ஒரு கண் திருஷ்டி எதிர்மறை ஆற்றல் உங்களை கடினமாக பாதித்து இருக்கிறது என்றுதான் அர்த்தம். இதிலிருந்து விடுபட என்ன செய்வது.

ஒரு மெல்லிசான காட்டன் துணி எடுத்துக்கோங்க. இல்லையென்றால் ஒரு வெள்ளை டிஷ்யூ பேப்பர் பயன்படுத்தலாம். இல்லையென்றால் வெள்ளை நிறத்தில் இருக்கும் நோட்டுப் புத்தக பேப்பர் ஒன்றை எடுத்து பயன்படுத்தலாம். இந்த பேப்பரில் 1 கிராம்பு, 1 வெள்ளை பூண்டு, ஒரு பச்சை கற்பூரம், ஒரு சின்ன படிகார கல், வைத்து மடித்து, இரவு தூங்கும் போது இதை தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

இந்த பரிகாரத்தை செய்யும் போது நீங்கள் தனியாக படித்துக் கொள்ள வேண்டும். ஒரு பாய் போட்டு தலையணை போட்டு படுத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலை எழுந்து முதல் வேலையாக இந்த பொட்டலத்தை எடுத்து உங்களுடைய தலையை வலது புறமாக மூன்று முறை, இடது புறமாக மூன்று முறை, ஏற்ற இறக்கமாக மூன்று முறை சுற்றி ஒரு மண் அகல் விளக்கில் வைத்து ஒரு சூடத்தை இது மேல் வைத்து எரித்து விடுங்கள். பொட்டலத்தை பிரிக்க வேண்டாம் பேப்பர் ரோடு எடுத்து விடவும்.

இதையும் படிக்கலாமே: கடன் கரைந்து போக வராகி வழிபாடு

அவ்வளவுதான் உங்களை பிடித்த கண்திருஷ்டி மொத்தமும் இந்த நெருப்போடு சாம்பலாக மாறிவிடும். இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை இரவு, ஞாயிற்றுக்கிழமை இரவு செய்யலாம். அமாவாசை இரவிலும் செய்யலாம். நிச்சயமாக உங்களை பின் தொடரும் பிரச்சனைகள் தீருவதற்கு இந்த பரிகாரம் நல்லதொரு வழியை காட்டும். நம்பிக்கை உள்ளவர்கள் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

The post ஒட்டுமொத்த கண் திருஷ்டியையும் ஒழித்துக்கட்டும் பரிகாரம் appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.