‘கல்கி 2898 ஏடி’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக வங்க மொழி நடிகர்

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், 'கல்கி 2898 ஏடி'. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உட்பட பலர் நடித்துள்ளனர். அறிவியல் புனைவு படமான இது வரும் 27-ல் வெளியாகிறது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இதில் பிரபாஸ், பைரவா என்ற கேரக்டரில் நடிக்கிறார். அவரின் நண்பராக புஜ்ஜி என்ற எலெக்ட்ரிக் கார் வருகிறது. எதிர்கால வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 6 டன் கார், ரசிகர்கள் முன்னிலையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தப் படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் கவுரவ வேடத்தில் நடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரபல வங்க மொழி நடிகர் சாஸ்வதா சட்டர்ஜி, இதில் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.