திருமணத்தடை நீங்க சக்தி வாய்ந்த பரிகாரம்

இன்றைய சூழ்நிலையில் ஒரு குடும்பம் சந்தோஷமாக ஒற்றுமையாக வாழ்வது என்பது பெரிய சவாலான விஷயமாக இருக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சனையில் வாக்குவாதம் அதிகரித்து, நீயா நானா என்ற தலைகனம் வந்து, ஈகோ பிரச்சினையால் வாழ்க்கையை மிக சுலபமாக முடித்துக் கொள்கிறார்கள்.

சில பேருக்கு திருமண வாழ்க்கை அமைவது கஷ்டம் என்றால், திருமண வாழ்க்கை அமைந்த பல பேர் அந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று தெரியாமல் கிடைத்த வாழ்க்கையை இழந்து விட்டு நிற்கிறார்கள். உங்களுக்கு திருமணம் நடக்கவில்லையா. இந்த பரிகாரத்தை செய்யுங்கள். திருமணம் நடந்தும் இல்லற வாழ்க்கை சரியாக இல்லையா. இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் நல்ல வழியை அந்த ஆண்டவன் காண்பித்துக் கொடுப்பான்.

செவ்வாய் தோஷம் நீங்க

செவ்வாய் தோஷம் நீங்குவதற்கு ஒரே வழிபாடு முருகன் வழிபாடு தான். உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் வள்ளி தெய்வானையோடு இருக்கக்கூடிய சன்னிதானத்தில் தான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். தனி முருகர் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை செய்தால் பலன் கிடையாது.

மூன்று செவ்வரளி மாலை வாங்கிக்கோங்க. 3 தேங்காய், 6 வெத்திலை, 6 சீவல் பாக்குகள், 6 வாழைப்பழம் வாங்கி முருகன் கோவிலில் கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். கட்டாயம் இந்த வழிபாட்டை செய்யும் போது திணை மாவோடு தேன் அல்லது வெல்லம் நாட்டு சர்க்கரை சேர்த்து முருகனுக்கு நெய்வேதியம் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு இதை பிரசாதமாக கொடுக்க வேண்டும்.

முருகரிடம் உங்களுடைய திருமணத்தடை விலக வேண்டும் என்று மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை 5 செவ்வாய்க்கிழமை தொடர்ந்து செய்து வந்தால், உங்களுக்கு இருக்கும் திருமண தடை விலகும். உங்களுடைய பிள்ளைகளுக்காக பெற்றவர்களும் இதை செய்யலாம்.

உங்களுக்கு திருமணம் நடந்து விட்டது. இருந்தும் இல்லற வாழ்க்கை சிறக்கவில்லை என்றாலும் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த கணவன் மனைவியில் யாராவது ஒருவர் இந்த வழிபாட்டை செய்தாலும் குடும்பம் ஒன்று சேரும்.

அடுத்து நாக தோஷம் இருப்பவர்கள், செவ்வாய்க்கிழமை காளி கோவிலுக்கு சென்று, காளி தேவிக்கு எலுமிச்சம்பழம் மாலை அணிவித்து விளக்கு ஏற்றி வேண்டுதல் வைத்தால் நாக தோஷத்தால் ஏற்பட்ட தடைகள் விலகும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. காளி கோவிலில் இந்த படிகாரத்தை செய்ய முடியவில்லை என்றால் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் துர்க்கை அம்மன் சன்னிதானத்திற்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளவும்.

அந்த காலத்தில் இருந்தே எலுமிச்சம் பழத்தில் விளக்கு போடும் வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் சிலர் எலுமிச்சம்பழத்தில் விளக்கு போடலாம் என்று சொல்கிறார்கள். சிலர் போடக்கூடாது என்று சொல்கிறார்கள். அந்த விவாதத்திற்கு நாம் வர வேண்டாம். உங்கள் மனதிற்கு இதில் குழப்பம் இருந்தால் மண் அகல் விளக்கிலேயே அந்த துர்க்கை அம்பாளுக்கு விளக்கை போட்டுவிட்டு செவ்வரளி பூக்களை துர்க்கை அம்மனுக்கு வாங்கி கொடுத்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வந்தாலும் திருமண தோஷம் விலகும்.

அது மட்டுமில்லாமல் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் துர்கை அம்மன் வழிபாடு செய்தால் எந்த பிரச்சனையையும் அந்த அம்பாள் சரி செய்து வைப்பாள். தொழிலில் முன்னேற்றம் இருக்கும், பெண்களுக்கு திருமணம் நடக்கும், ஆண்களுக்கும் திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன் சுமைக்குறையும். கண் திருஷ்டி விளக்கும் ஏவல் பில்லி சூனிய பிரச்சனையிலிருந்தும் வெளிவரலாம்‌.

இதையும் படிக்கலாமே: கர்மா கரைந்து போக தானங்கள்

ஏனென்றால் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மனுடைய மனது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்குமாம், அந்த நேரத்தில் வரத்தை கேட்டால் அவள் தரமாட்டேன் என்று சொல்லவே மாட்டாள் என்பதுதான் நம்முடைய சாஸ்திரத்தில் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.

The post திருமணத்தடை நீங்க சக்தி வாய்ந்த பரிகாரம் appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.