காரிய வெற்றி ஏற்பட ஏலக்காய் பரிகாரம்
வருமானத்தை அதிகரிக்க வேண்டும், பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று பலரும் பல முயற்சிகளில் அல்லும் பகலும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஏதாவது ஒரு முயற்சியாவது வெற்றியடைந்து அதன் மூலம் நமக்கு பணவரவு ஏற்படாதா அதனால் நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீராதா என்ற ஏக்கம் பலருக்கும் இருக்கிறது. அப்படிப்பட்ட பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்குவதற்கும் பணவரவை பெறுவதற்காக செய்யக்கூடிய முயற்சிகள் வெற்றி அடையவும் ஏலக்காயை வைத்து எந்த முறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
தடை நீங்க ஏலக்காய் பரிஹாரம்
பணவரவு ஏற்பட வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருள் என்பது வேண்டும். மகாலட்சுமியின் அருள் இல்லை என்றால் பணவரவில் தடைகள் ஏற்படும். தொழில் நன்றாக நடைபெறாது. தேவையற்ற பிரச்சினைகளால் தொழில் முடக்கம் ஏற்படும். வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்காது. குடும்பத்தில் நிம்மதி என்பதே இருக்காது. இவை அனைத்தையும் சரி செய்வதற்கு மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது வேண்டும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கும் மேற் சொன்ன பிரச்சனைகள் அனைத்தும் தீருவதற்கும் ஏலக்காயை வைத்து செய்யக்கூடிய பரிகாரத்தை பார்ப்போம்.
மகாலட்சுமியின் அருளைப் பெற வேண்டும் என்றால் மகாலட்சுமிக்கு பிடித்தமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அப்படி மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான பொருட்களுள் ஒன்றுதான் ஏலக்காய். ஏலக்காய் எந்த இடத்தில் இருக்கிறதோ ஏலக்காயின் வாசம் எந்த இடத்தில் வீசுகிறதோ அந்த இடத்தில் மகாலட்சுமியின் அருள் என்பது இருக்கும். சரி இந்த ஏலக்காயை வைத்து எப்படி பரிகாரம் செய்வது என்று பார்ப்போமா?
இந்த பரிகாரத்தை என்று வேண்டுமானாலும் செய்யலாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். மதிய வேளையை மட்டும் தவிர்த்துக் கொள்வது நல்லது. இந்த பரிகாரத்திற்கு நமக்கு மூன்று ஏலக்காயும் ஒரு சிவப்பு நிற சதுர வடிவில் இருக்கக்கூடிய துணியும் தேவைப்படும்.
முதலில் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்களுடைய வலது கையில் 3 ஏலக்காயை எடுத்து வைத்து மூடி கொள்ளுங்கள். இந்த ஏலக்காயில் வெடிப்பு இருக்கக் கூடாது. அந்த ஏலக்காய்க்குள் விதைகள் இருக்க வேண்டும். விதைகள் இல்லாத ஏலக்காயை தேர்வு செய்யக்கூடாது. இப்பொழுது வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு “ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமக” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
இவ்வாறு உச்சரித்துவிட்டு உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அறைக்கும் சென்று தன்னைத்தானே ஏழு முறை வலது புறமாக சுற்ற வேண்டும். இப்படி செய்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறைக்கு வந்து சிவப்பு நிற துணியை எடுத்து வைத்திருப்போம் அல்லவா அதில் இந்த ஏலக்காயை போட்டு சிவப்பு நிற நூலால் மூட்டையாக கட்டி, பூஜையறையில் ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். 21 நாட்கள் இந்த மூட்டை அதே இடத்தில் இருக்கட்டும்.
21 நாட்கள் நிறைவடைந்த பிறகு இந்த மூட்டையை ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். அருகில் ஓடுகின்ற நீர் இல்லாத பட்சத்தில் மருதாணி செடி, வேப்பமரம், அரசமரம், ஆலமரம் இந்த மரங்களுக்கு அடியில் சிறிது பள்ளம் நோண்டி இந்த மூட்டையை வைத்து அப்படியே புதைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கும். தொழில் ரீதியாகவோ வேலை ரீதியாகவோ மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். காரிய வெற்றி உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனை தீர கால பைரவர் வழிபாடு
மிகவும் எளிமையான இந்த ஏலக்காய் பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து காரிய வெற்றியை ஏற்படுத்தி பணவருவை அதிகரித்துக் கொள்ளலாம்
The post காரிய வெற்றி ஏற்பட ஏலக்காய் பரிகாரம் appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.