வேலை வாய்ப்பை அள்ளித் தரும் முருகன் வழிபாடு

சமுதாயத்தில் அந்தஸ்தை காட்டக்கூடிய ஒன்றாக திகழ்வதுதான் நம்முடைய வேலை. ஒருவர் எந்த வேலையை செய்கிறாரோ அதற்கேற்றார் போல் அவருக்கு மரியாதை கிடைக்கும். ஒருவருடைய வேலையை அடையாளமாக காட்டி அவர்களைப் பற்றி பேசும் நபர்களும் பலர் இருக்கிறார்கள். போலீஸ்காரர் வீடு, டாக்டர் பையன் இப்படி கூறுவதை நாமே காது பட கேட்டிருக்கிறோம்.

அப்படி ஒருத்தருடைய மதிப்பையும் மரியாதையும் நிர்ணயிக்கக்கூடிய வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக சிறுவயதிலேயே இந்த வேலையில் சேர வேண்டும் என்று நினைத்து அதற்குரிய படிப்பை படித்து முடித்து அந்த வேலையில் சேர்வதற்காக பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். இதில் பலருக்கு வெற்றிகள் கிடைத்தாலும் பலருக்கு தோல்விகளை ஏற்படும். அந்த தோல்வியின் காரணமாக என்ன வேலை கிடைக்கிறதோ அந்த வேலையில் சேர்ந்து கொள்வோம்.

பிறகு பார்த்துக் கொள்வோம் என்று தங்களுடைய கனவு வேலையை விட்டு விட்டு சாதாரணமாக ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து தங்களுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இப்படி தாங்கள் ஆசைப்பட்ட வேலை கிடைக்க முருகப்பெருமானை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நல்ல வேலை கிடைக்க வேலவன் வழிபாடு

வேலை தொடர்பான அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்ற கூடிய கிரகமாக திகழ்பவர் சூரிய பகவான். இருப்பினும் தெய்வங்களை நாம் அடிப்படையாக வைத்து பார்க்கும் பொழுது வேலை தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முருகப்பெருமாள் உதவி செய்வார். அப்படிப்பட்ட முருகப்பெருமானின் அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாடு முறையை பார்ப்போம்.

இந்த வழிபாட்டை நாம் முருகப்பெருமானுக்குரிய கிழமையான செவ்வாய்க்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். சரியாக சூரிய உதயம் ஆகும் பொழுது செய்வது சிறப்பு. முதல் நாளே நல்ல தேங்காயாக பார்த்து மூன்று தேங்காயை வீட்டிற்கு வாங்கி வரவும். அதை நன்றாக சுத்தம் செய்து அதில் மஞ்சள் தடவி வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் சூரிய உதயம் ஆகும் பொழுது அருகில் இருக்கக்கூடிய முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

அங்கு முருகப்பெருமானின் சன்னதிக்கு முன்பாக ஒரு வாழை இலையை விரித்து அது முழுவதும் பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள். அடுத்ததாக நாம் எடுத்து வந்த தேங்காயை சரிசமமாக உடைத்து அதில் இருக்கக்கூடிய நீரை கால்படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். பிறகு தேங்காய்க்கு சந்தனம் குங்குமம் வைத்து பச்சரிசியின் மேல் வைக்க வேண்டும். அடுத்ததாக இந்த தேங்காயில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து செவ்வரளி பூக்களை உதிரியாக வாங்கி வந்து உங்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலை மனதிற்குள் வைத்துக்கொண்டு அந்த பூக்களை மாலையாக தொடுத்து முருகப் பெருமானுக்கு கொடுக்க வேண்டும். சிறிது உதிரிப்பூக்களையும் எடுத்து முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்காக கொடுத்து விடுங்கள். பிறகு உங்களுக்கு நீங்கள் நினைத்த வேலை கிடைக்க வேண்டும் என்று கூறி முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய சொல்லுங்கள்.

இப்படி தொடர்ந்து ஆறு வாரங்கள் ஆறு தேங்காய் தீபத்தை ஏற்றி வைத்து முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலையை சாற்றி செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய நீங்கள் நினைத்த வேலை நினைத்த படி கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: திருமண தடை விலக செல்ல வேண்டிய ஆலயம்

விளக்கு ஏற்றி விட்டோம். வேலை தேட வேண்டாம். அதுவே நம்மை தேடி வரும் என்று நினைக்காமல் வேலையை தேடிக் கொண்டே இந்த வழிபாட்டை செய்தால் முருகப் பெருமானின் அருளால் நீங்கள் விரும்பிய வேலை உங்களுக்கு கிடைக்கும். நம்பிக்கை இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

The post வேலை வாய்ப்பை அள்ளித் தரும் முருகன் வழிபாடு appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.