கஷ்டம் தீர குலதெய்வ வழிபாடு

ஒவ்வொரு மனிதனும் பிறரை பார்த்து நினைக்கும் ஒரே விஷயம் இது தான். இவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்களே நமக்கு மட்டும் ஏன் இத்தனை பிரச்சனை என்று தான். ஆனால் உண்மை அதுவல்ல ஒவ்வொரு மனிதருக்கும் பிரச்சனை உண்டு. அதன் அளவுகள் வேண்டுமானால் மாறுபடலாம். ஆனால் பிரச்சனை இல்லாத ஒருவரை கூட இந்த உலகத்தில் நம்மால் அடையாளம் காட்ட முடியாது.

இதிலும் ஒரு சிலர் இருக்கிறார்கள் எல்லாவற்றிலும் பிரச்சனையாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்காது. பண பிரச்சனை, மனப்பிரச்சனை, உடல் உபாதை என்று தொடர்ந்து பிரச்சினைக்கு மேல் பிரச்சனையாகவே இருந்து கொண்டிருக்கும். இப்படியானவர்கள் நிச்சயம் மன நிம்மதியுடன் வாழ்வது முடியாத காரியம் தான். இக்கட்டான இந்த நிலையிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரு எளிய தீர்வை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

துன்பம் தீர குலதெய்வ வழிபாடு

ஒரு குடும்பத்தில் இப்படி தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்தால் அங்கு குலதெய்வ அருள் இல்லாததே இருப்பதே முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. குலதெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும் குடும்பத்தில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அவற்றிலிருந்து அவர்கள் மீண்டு வந்து விடுவார்கள். மீளவே முடியாத துன்பம் ஒருவரை ஆட்கொள்கிறது என்றால் அங்கு குலதெய்வம் இல்லை என்று தான் அர்த்தம்.

அப்படியான குலதெய்வத்தின் அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழும். அடுத்து குலதெய்வமே தெரியாதவர்கள் என்ன செய்வது என்று கேள்வி எழும். இந்த இருவருமே செய்யக் கூடிய ஒரு எளிய தீப பரிகாரத்தை தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். இந்த தீபத்தை அமாவாசை,
பௌர்ணமி அல்லது தேய்பிறை அஷ்டமி இந்த மூன்று தினங்களில் மதியம் 12 மணிக்கு தான் ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்தை வீட்டின் வரவேற்பறையின் மத்தியில் ஏற்ற வேண்டும். அதற்கு முதலில் பச்சரிசி மாவில் சிறியதாக ஒரு கோலம் போட்டுக் கொள்ளுங்கள். அதன் மேல் பச்சரிசியை முழுவதுமாக பரப்பிய பிறகு ஒரு சிறிய தட்டை வைத்து விடுங்கள். வந்த தட்டில் அகல் விளக்கை வைத்து நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் கலந்து ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபம் வடக்கு திசை நோக்கி எரிய வேண்டும். அதன் பிறகு நீங்கள் இந்த தீபத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். அப்படி வரும் போது உங்களுக்கான மனக்குறை என்னவோ அது சரியாக வேண்டும் என்று கோரிக்கையை குலதெய்வத்திடம் வைக்க வேண்டும். இது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பரிகாரமாக கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பாவங்கள் தீர பரிகாரம்

இந்த தீபத்தை ஏற்றிய அன்றைய தினமே உங்களுடைய பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கும் அல்லது அதை தீர்ப்பதற்கான தெளிவோ, வழியோ உங்களுக்கு கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த தீப வழிபாட்டை மேற்கொண்டு குலதெய்வத்தின் அருளோடு நிம்மதியான வாழ்க்கையை வாழ வழி தேடி கொள்ளுங்கள்.

The post கஷ்டம் தீர குலதெய்வ வழிபாடு appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.