பணம் சேர மந்திரம்

இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் பணம் இல்லாமல் ஒரு நாள் கூட நம்மால் நிம்மதியாக வாழ முடியாது. இன்னும் சொல்லப் போனால் பணம் தான் இன்று இந்த உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். அத்தகைய பணத்தை சம்பாதிக்க நாமும் அனுதினமும் பெரும்பாடு பட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் பாடுபடும் அனைவரிடமும் பணம் இருக்கிறதா? என்றால் சந்தேகம் தான்.

கஷ்டப்பட்டு உழைத்து பணம் சம்பாதிக்க முடியும் என்பது எள்ளளவும் மறக்க முடியாத உண்மை தான். ஆனால் சம்பாதித்த பணம் பல மடங்கு பெருக வேண்டுமெனில் அந்த பணமானது நம்மிடம் தங்க விருப்பப்பட வேண்டும். அப்போது தான் அது விருச்சம் போல வளர்ந்து நம்முடைய செல்வ நிலை உயரும். பணம் நம்மிடம் தங்குவதற்கான ஒரு எளிய மந்திர வழிபாட்டை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

பணம் சேர மந்திரம்

இந்த மந்திர வழிபாட்டை அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் தான் செய்ய வேண்டும். இந்த மந்திரத்தை மற்ற நேரத்தில் சொல்லும் பொழுது பலன் கிடைக்காது. அதே போல் இந்த மந்திரத்தை பூஜை அறையில் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்து விட்டு அதன் முன் அமர்ந்து சொல்ல வேண்டும். இதைத் தவிர்த்து பூஜை செய்து விட்டு மந்திரம் சொல்பவர்கள் எளிமையாக பூஜை செய்த பின் மந்திரத்தை படிக்கலாம்.

ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்ரீ வேத ரூபியே நமோஸ்துதே
ஸ்ரீ நாத ரூபியே நமோஸ்துதே
ஸ்ரீ அஷ்டலட்சுமி நமோஸ்துதே
ஸ்ரீ ஆதார நிலயே நமோஸ்துதே

ஸ்ரீ ஸெந்தர்ய ரூபே நமோஸ்துதே
ஸ்ரீ நாராயண ப்ரியதமே நமோஸ்துதே
ஸ்ரீ விஷ்ணு மாயே நமோஸ்துதே
ஸ்ரீ காருண்ய பூர்ணே நமோஸ்துதே
ஸ்ரீ பீதாம்பர தேவியே நமோஸ்துதே

ஸ்ரீ மங்கள ரூபே நமோஸ்துதே
ஸ்ரீ குபேர லட்சுமி நமோஸ்துதே
ஸ்ரீ ஈசான லட்சுமி நமோஸ்துதே
ஸ்ரீ காயத்ரி தேவி நமோஸ்துதே
ஸ்ரீ தனதா தேவியை நமோஸ்துதே
ஓம் ஐம் க்லீம் தனம் தருவாய் நமோஸ்துதே

என்ற இந்த மந்திரத்தை தினமும் மூன்று முறை உச்சரிக்க வேண்டும். பெண்கள் இந்த மந்திர வழிபாடு செய்யும் போது அவர்களுக்கான மாதவிலக்கு நேரத்தை தவிர்த்து மற்ற நாட்களில் செய்யலாம்.

இந்த மந்திர ஒலி கேட்கும் இடத்தில் பண வசியம் ஏற்பட்டு பணம் பல வழிகளில் வந்து சேர்வதற்கான வாய்ப்பு உருவாகும். நல்ல வேலை வாய்ப்பு வருமானம் சம்பள உயர்வு தொழில் முன்னேற்றம் போன்ற பண தொடர்பான அனைத்து நல்ல விஷயங்களும் நடந்து பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடையக் கூடிய யோகம் தரும்.

இதையும் படிக்கலாமே: பிறர்விடும் சாபத்திலிருந்து தப்பிக்க பரிகாரம்.

இந்த மந்திர வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை அடையாலம் என்ற இந்த கருத்துடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

The post பணம் சேர மந்திரம் appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.