பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் நீங்க செய்ய வேண்டிய தானம்.

தானம் என்பது நம்முடைய பாவங்களை நீக்கி நமக்கு புண்ணியங்களை சேர்க்கக்கூடிய செயலாக கருதப்படுகிறது. நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளின் இருந்து வெளியில் வருவதற்கு அந்தப் பிரச்சினைகளுக்குரிய தானத்தை நாம் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்களும் புராணங்களும் கூறுகின்றன. அந்த வகையில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகளை தீர்ப்பதற்கு செய்யக்கூடிய தானத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அந்த குடும்பத்தின் இருக்கும் பெண்கள் நன்றாக இருக்க வேண்டும். பெண்கள் நம் கண்கள் என்று கூறினால் மட்டும் பத்தாது. பெண்களை உண்மையிலேயே நம் கண்கள் போல் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு ஒரு பெண்ணை அந்த குடும்பத்தில் இருக்கும் மற்ற நபர்கள் பார்த்துக் கொள்கிறார்களோ அதைவிட பல மடங்கு அதிகமாக அந்தப் பெண்கள் குடும்ப நபர்களை பார்த்துக் கொள்வார்கள். தன்னலமற்ற அந்த பெண்களின் நலனை பாதுகாக்க செய்யக்கூடிய தானத்தை பற்றி பார்ப்போம்.

பொதுவாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய நோய்கள் என்று பார்க்கும் பொழுது ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் தான் அதிக அளவில் தாக்கும். மேலும் உடல் உஷ்ணத்தாலும் பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது அல்லது உடல் நலம் சீர்குலைகிறது அல்லது எவ்வளவுதான் மருத்துவம் பார்த்தாலும் அந்த பாதிப்பானது சரி ஆகாமல் இருப்பது இப்படி இருக்கக்கூடிய அனைத்திற்கும் காரணமாக திகழ்பவர் செவ்வாய் பகவானே.

பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் நீச்சமாக இருக்கும் பொழுது இந்த மாதிரியான பிரச்சனைகள் அந்த பெண்ணிற்கு ஏற்படும். அப்படிப்பட்ட நேரத்தில் செவ்வாய் பகவானின் அருளை பெறுவதற்கு பெண்கள் தானம் செய்ய வேண்டும். செவ்வாய் பகவானுக்குரிய தானியமாக கருதப்படுவது துவரம் பருப்பு. இந்த துவரம் பருப்பை செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரையான காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மற்றும் மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் வாங்க வேண்டும். இரவு நேரத்தில் வாங்கக்கூடாது.

வாங்கி வந்த துவரம் பருப்பில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து தனியாக பூஜை அறையில் வைத்து விட வேண்டும். மீதம் இருக்கும் துவரம் பருப்பை சமையலுக்கு உபயோகப்படுத்தலாம். இப்படி தொடர்ந்து ஐந்து வாரங்கள் ஒரு பிடி துவரம் பருப்பு என்ற வீதத்தில் 5 பிடி துவரம் பருப்பை எடுத்து பூஜ அறையில் வைக்க வேண்டும்.

இந்த துவரம் பருப்பை சம்பந்தப்பட்ட பெண்கள் தான் கடைக்கு சென்று வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஐந்து வாரங்கள் செய்த பிறகு ஆறாவது வாரம் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு ஆலயத்திற்கு சென்று அங்கு நடக்கக்கூடிய அன்னதானத்திற்கு துவரம் பருப்பை தானமாக தர வேண்டும். இவ்வாறு தருவதன் மூலம் செவ்வாய் பகவானின் அருளை குடும்பத்தில் இருக்கும் பெண்களால் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: சக்தி தீப வழிபாடு.

இந்த எளிமையான தானத்தை வீட்டில் இருக்கும் பெண்களை செய்ய சொல்லி அவர்களின் நலனை பேணி பாதுகாப்போம்.

The post பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் நீங்க செய்ய வேண்டிய தானம். appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.