கோப்பை வழங்கும் நிகழ்வில் பாட் கம்மின்ஸை ‘கண்டுகொள்ளாமல்’ நகர்ந்தாரா பிரதமர் மோடி? - சர்ச்சையும் உண்மையும்

அகமதாபாத்: 2023 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸிடம் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கூடவே, அதுகுறித்த சர்ச்சை ஒன்றும் இலவச இணைப்பாக வலம் வருகிறது. அந்த சர்ச்சை குறித்தும், அதன் உண்மைத் தன்மை குறித்தும் பார்ப்போம்.

என்ன சர்ச்சை? - உலகக் கோப்பையை வழங்கியப் பின்பு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸியை பிரதமர் மோடி அவமதித்து, நிராகரித்துச் சென்றதாக இணையவாசிகள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், அந்த ‘துண்டு’ வீடியோவுடன் ‘இந்தியா தன்னளவில் தான் ஒரு மோசமான நிகழ்ச்சி நடத்துநர் என்று நிரூப்பித்துள்ளது" என்ற வாசகங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை 4,00,000-க்கும் அதிகமானோர் பார்த்திருந்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.