கணவன் மனைவி ஒற்றுமைக்கு துர்க்கை வழிபாடு

கணவன் மனைவி காலத்திற்கும் அன்யூன்யமாக ஒன்றாக வாழ வேண்டும் என்று நினைத்தாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். பிரிந்து இருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும் என்று நினைத்தாலும், துர்க்கை அம்பாளை நினைத்து இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்தபடியே செய்து பலன் பெறலாம்.

துர்க்கை அம்மன் வழிபாடு என்றதுமே நம் நினைவுக்கு வருவது ராகு காலம் பூஜை தான். இந்த வழிபாட்டையும் நாம் ராகு கால நேரத்தில் தான் செய்யப் போகின்றோம். ஆனால் வீட்டில் இருந்தபடியே செய்யப் போகின்றோம். வாங்க குடும்ப நலன் கருதி அந்த பூஜையை வீட்டில் எப்படி செய்வது என்று ஆன்மீகம் சார்ந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.

கணவன் மனைவி ஒற்றுமைக்கு துர்க்கை அம்மன் வழிபாடு

இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை ராகுகால நேரம் மதியம் 3.00 மணியிலிருந்து 4.30 மணி வரை வீட்டிலேயே செய்யலாம். வழக்கம் போல பூஜைக்கு எப்படி பூஜை அறையை தயார் செய்வீர்களோ, அதே போல வாசனை நிறைந்த பூக்களை போட்டு, பூஜை அறையை தயார் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் துர்க்கை அம்மனின் திருவுருவப்படம் இருந்தால் அந்த அம்பாளுக்கு செவ்வரளி பூ போடலாம். அப்படி இல்லை என்றால் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு அம்மனுக்கு செவ்வரளி பூ வாங்கி வைத்து விடுங்கள். வீட்டில் நீங்கள் ஏற்றும் காமாட்சி அம்மன் விளக்கு, அகல் விளக்கோ அல்லது குத்து விளக்கு ஏதோ ஒரு விளக்கு ஏற்றுக் கொள்ளுங்கள்.

துர்க்கைக்கு இனிப்பு நெய்வேதியம் வைக்க வேண்டும். வெற்றிலை பாக்கு பூ பழம் வைத்துவிட்டு, மனம் உருகி வேண்டுதல் வைக்கவும். கணவன் மனைவிக்குள் சண்டை வரக்கூடாது. குடும்பம் எப்போதும் ஒற்றுமையாக இருக்கணும். அந்த சிவன் பார்வதி போல கணவன் மனைவி ஒற்றுமையாக வாழனும் என்று வேண்டுதல் வச்சுக்கோங்க.

ஒருவேளை நீங்கள் கணவரை விட்டு பிரிந்து இருந்தால், கணவரோடு சேர வேண்டும் என்று இந்த பிரார்த்தனையை வைக்கலாம். 10 நிமிடம் பூஜை அறையில் துர்க்கை அம்பாளை மனதில் நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு சிறிது நேரம் கழித்து விளக்கை மலை ஏற்றி விடுங்கள். அந்த விளக்கு திரியில் கருப்பு நிறத்தில் ஒரு திலகம் இருக்கும் அல்லவா.

அதை எடுத்து பெண்கள் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். உச்சந்தலையில் லேசாக தடவிக் கொள்ள வேண்டும். நீங்கள் ஏற்றி வைத்திருந்த அந்த தீபச்சுடர் தான் துர்க்கை அம்பாள். அந்த அம்பாளே வந்து உங்களுக்கு ஆசீர்வாதம் செய்ததாக அர்த்தம். இந்த பூஜையில் அவ்வளவு பெரிய வழிபாட்டு முறை உங்களுக்கு மறைந்திருக்கிறது.

முழு நம்பிக்கையோடு அந்த தீபச்சுடர் தான் அம்பாள் என்று நீங்கள் நினைத்து இந்த வழிபாட்டை செய்தீர்கள் என்றால் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வது உறுதி. அதுமட்டுமில்லாமல் ஒன்றாக இருக்கும் கணவன் மனைவிக்குள் அன்யூன்யம் அதிகரிக்கும் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: குழந்தை வரம் பெற வழிபாடு செய்ய வேண்டிய அம்பாள்

சந்தோஷம் பிறக்கும். இந்த வழிபாட்டை ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் வீட்டில் இருந்தபடியே செய்யலாம். எளிமையான இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

The post கணவன் மனைவி ஒற்றுமைக்கு துர்க்கை வழிபாடு appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.