1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருக்கோவில்..!
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருக்கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த கோயில் புண்ணிய பூமி என்பதால் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்றும் தீராத வினைகளை தீர்த்து வைக்கும் திருக்கோடீஸ்வரர் மனதில் நிம்மதியை வைத்திருக்க அருள் புரிவார் என்றும் கூறப்படுகிறது.
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் அம்பாள் திரிபுரசுந்தரி அம்பிகை உள்ளார். திருக்கோடிகாவல் புண்ணிய பூமி என்பதால் இங்கு இடுகாடு சுடுகாடு என்று எதுவும் இருக்காது.
காவிரி ஆறு வடக்கு நோக்கி உள்ள இந்த கோவில் உள்ள திருக்கோகோடீஸ்வர பெருமானை வழிபடுபவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.