எவ்வளவு பெரிய மன அழுத்தம் இருந்தாலும், அதை ஒரு நொடிப் பொழுதில் குறைக்க கூடிய சக்தி இந்த 1 பொருளுக்கு உண்டு. பிரச்சனையில் சிக்கி தவிக்கும் போது இதை செய்துதான் பாருங்களேன்.

ஒரு மனிதனுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் வரலாம், போலாம். அந்த பிரச்சனைகளை சமாளிக்கும் தெம்பு சில பேருக்கு இருக்கும். சில பேருக்கு இருக்காது. ஆனால், வந்த பிரச்சனையின் மூலம் மன அழுத்தம் மட்டும் ஒருவருக்கு ஏற்படவே கூடாது. மன அழுத்தம் ஏற்பட்டு விட்டால் அதன் மூலம் பெரிய பெரிய பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உதாரணத்திற்கு கணவன் மனைவிக்குள் சண்டை வருவதும் போதும் சகஜம். மாமனார், மாமியார், மருமகள், நாத்தனார், இப்படி குடும்பத்தில் இருக்கும் போது அதன் மூலம் சண்டை வருவதும் சகஜம் தான்.

fight4

இப்படி இன்று சண்டை வந்துவிட்டால், நாளை அந்த சண்டை சரியாகிவிடும். ஆனால் இந்த சண்டையால் குடும்பத்தில் இருப்பவர்கள் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டு, அந்த சண்டையில் நடந்த பிரச்சனையை மனதில் வைத்து, அவர்கள் பேசிய வார்த்தைகளை மனதோடு வைத்து, புழுங்கிக் கொண்டே இருந்தால் அது மன அழுத்தமாக மாறிவிடும். (சிம்பிளா சொல்லனும்னா, மறக்க வேண்டிய விஷயத்தை மறக்க மாட்டாங்க. நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய விஷயத்தை மறந்திடுவாங்க). பிரச்சனை என்று வந்தால் அந்த இடத்தில் பேசி தீர்த்து விடுங்கள். மனதில் எதையும் வைத்துக் கொள்ளாதீர்கள். எல்லா பிரச்சனையையும் மனதில் குப்பை தொட்டி போல வைத்திருந்தால், அப்படியே உங்களுக்கு பெரிய வியாதியாக பிற்காலத்தில் மாறிவிடும். சரி, மன அழுத்தத்தை குறைக்கவே முடியவில்லை. இதை சரி செய்வதற்கு என்ன செய்வது. தியானம் செய்யலாம்.

மன அழுத்தம் குறைய கிராம்பு பரிகாரம்:
சில பேருக்கு கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தாலே மன அழுத்தத்திற்கு காரணமான அந்த பிரச்சனை தான் ஞாபகம் வரும். இப்படி நீங்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டால் இந்த ஆன்மீகம் சொல்லும் எளிமையான பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள்.

krambu

கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய கையில் 3 கிராம்பு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எதனால் மன அழுத்தம் வந்தது அந்த பிரச்சனையை ஒருமுறை மனதார நினைவுகள். தவறு கிடையாது. கிராம்பை கையில் வைத்துக் கொண்டு நெகட்டிவ் விஷயமாக இருந்தாலும், நெகடிவ் விஷயத்தை கொடுத்த நபராக இருந்தாலும் அவரை மனதில் நன்றாக நினைத்துக் கொள்ளுங்கள்.

கோபத்தை எல்லாம் கையில் இருக்கும் கிராம்புக்கு கொண்டு வாருங்கள்‌. கண்களை மூடி ஒரு நிமிடம் இப்படி செய்தால் போதும். பிறகு உங்கள் கண் முன்னே ஒரு தட்டு வைத்து ஒரு கற்பூரம் வைத்து ஏற்றி அந்த நெருப்பில் இந்த மூன்று கிராம்புகளை ஒவ்வொன்றாக போட்டு பொசுக்கி விடுங்கள்.

neruppu

உங்களுடைய மன அழுத்தத்தையும் அந்த நெருப்போடு நெருப்பாக போட்டு பொசுக்கி விடுங்கள். பிறகு யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன. நான் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற உறுதி மொழியை மனதோடு எடுத்துக் கொண்டு, முடிந்தால் குளித்து விடுங்கள். இல்லை என்றால் கை கால் முகம் கழுவி விட்டு உங்களுடைய வேலையை பார்க்கத் தொடங்குங்கள்.

இதையும் படிக்கலாமே: உங்கள் வீட்டில் துளசி மாடம் உள்ளாதா? அப்படியானால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் உங்களுக்காக காத்திருக்கிறது. துளசி செடியுடன் இதையும் சேர்த்து வைத்தால் எங்கிருக்கும் அதிர்ஷ்டமும் உங்கள் வீடு தேடி வந்து விடும்.

இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்வது ரொம்ப ரொம்ப நல்லது வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை 3 வாரம் இதை செய்து பாருங்கள். சூப்பரான ரிசல்ட் கிடைக்கும். உங்களுக்கு ரொம்ப அவசரம் என்றால் மூன்று நாட்கள் தொடர்ந்து கூட, நாள் கிழமை பார்க்காமல் இந்த பரிகாரத்தை செய்யலாம் தவறு கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

The post எவ்வளவு பெரிய மன அழுத்தம் இருந்தாலும், அதை ஒரு நொடிப் பொழுதில் குறைக்க கூடிய சக்தி இந்த 1 பொருளுக்கு உண்டு. பிரச்சனையில் சிக்கி தவிக்கும் போது இதை செய்துதான் பாருங்களேன். appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.