படுக்கை அறையில் இந்த இரண்டு பொருள் ஒன்றாக வைத்து விட்டு உறங்கினால், உங்களைப் தகர்க்க நினைக்கும் எந்த எதிர்மறை சக்தியும் நீங்க இருக்கும் திசை பக்கம் கூட தலை வைத்து படுக்காது.

ஒவ்வொரு வீட்டிலும் சம்பாதித்து செல்வம் சேர்ப்பதெல்லாம் அடுத்த காரியம் தான். முதலில் நம்முடைய வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கும் கெட்ட சக்திகள், தீய எண்ணங்கள் கண் திருஷ்டிகள் போன்றவற்றை அண்ட விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இது எல்லாம் நம்பகத்தன்மை இல்லாதவை மூட நம்பிக்கை என்று எல்லாம் சொல்லலாம். இது போன்ற கெட்ட சக்திகளாலும் கண் திருஷ்டிகளாலும் வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்தர்களை கேட்டால் தெரியும் இது எத்தனை பெரிய துயரமான விசயம் என்று சொல்லுவார்கள்.

sad-crying

இதை மற்றவர்கள் சொல்வதை காட்டிலும் நாமே கூட உணர முடியும். நன்றாக வேலைக்கு சென்று வந்து கொண்டிருப்போம் திடீரென வேலையில் பிரச்சனை, உடல் நிலையில் பிரச்சனை வேலைக்கு செல்ல முடியாத அளவுக்கு உடல் சோம்பலாக இருக்கும். வீட்டில் நிம்மதி இழந்து எப்போதும் சண்டை சச்சரவாகவே இருந்து கொண்டிருக்கும். நிம்மதியாக தூங்க கூட முடியாது. இவையெல்லாம் இந்த தீய சக்திகளின் செய்வதாகவே பார்க்கப்படுகிறது. இதை சரி செய்வதற்கான ஒரு எளிய பரிகாரத்தை தான் இப்போது இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

கெட்ட சக்திகள் கண் திருஷ்டிகள் நீங்க பரிகாரம்
இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் ஒரு வெள்ளை நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி நிறைய மருதாணி விதைகளை எடுத்து போட்டுக் கொள்ளுங்கள். அதன் பிறகு மருதாணி இலைகளையும் அதில் போட்டுக் கொள்ளுங்கள். மருதாணி பூ வேர் போன்றவை கிடைத்தால் சேர்த்துக் கொள்ளலாம் இல்லை என்றால் இலையும் இதையும் இருந்தாலே போதும்.

aduppu kari

இந்த மருதாணி இலை விதையுடன் ஒரு சிறிய கரித்துண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் வீட்டில் கட்டை எரித்து கரித்துண்டு எடுத்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். இவை அனைத்தையும் சேர்த்த பிறகு இதை ஒரு முடிச்சாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

கட்டிய இந்த முடிச்சை நீங்கள் வீட்டில் படுக்கையறையில் எங்காவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள் இல்லை என்றால் உங்கள் தலையணை அடியில் கூட இதை வைத்து விடலாம். இதை வரவேற்பு அறையில் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள். இது எதையும் உங்களால் செய்ய முடியாத பட்சத்தில் இதை நிலைவாசலில் கூட கட்டிவிடலாம். இதனால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் கூட போய் விடும். நிம்மதியான தூக்கம், கெட்ட கனவுகள் இவையெல்லாம் சரியாகும் என்று சொல்லப்படுகிறது.

maruthani 2-compressed

மருதாணி செடி மகாலட்சுமி தாயாரின் அம்சம் பொருந்தியது. அது மட்டும் இன்றி இதில் எண்ணற்ற தெய்வீக தன்மைகளும் கொண்டது. அதே போல் நம்முடைய முன்னோர்கள் கண் திருஷ்டி கழிக்க கரித்துண்டை அதிக அளவு பயன்படுத்தி வந்தது நாம் அறிந்திருப்போம். இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைக்கும் போது கெட்ட சக்திகள் எல்லாம் நம்மை நெருங்காதோடு நல்லவை அனைத்து நம்மை தேடி வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: தீராத சிக்கலில் சிக்கி தவிக்கும் வேளையில் இந்த தெய்வத்தை ஒரு கணம் மனதார நினைத்தாலே போதும். எப்பேர்ப்பட்ட துன்பமும் வந்த திசை தெரியாமல் ஓடி விடும்.

இந்த ஆன்மீக பதிவில் உள்ள குறிப்புகளில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் உங்களுடைய வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள், கண் திருஷ்டிகள் போன்றவற்றையெல்லாம் நீக்கி நல்ல முறையில் வளமாக வாழ இந்த பரிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

The post படுக்கை அறையில் இந்த இரண்டு பொருள் ஒன்றாக வைத்து விட்டு உறங்கினால், உங்களைப் தகர்க்க நினைக்கும் எந்த எதிர்மறை சக்தியும் நீங்க இருக்கும் திசை பக்கம் கூட தலை வைத்து படுக்காது. appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.