மரணப் படுக்கையில் இருப்பவரை கூட மறுபடியும் எழுந்து நடமாட வைக்க தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த மந்திரத்தை சொன்னாலே போதும். மரணம் பயத்தை போக்கி வளமாக வாழ வைக்கும் சக்தி வாய்ந்த மந்திரம்.

ஒரு சிலர் எப்போதும் நோய் வாய்ப்பட்டே இருப்பார்கள் என்ன மருத்துவம் பார்த்தாலும் அவர்களுக்கு சரியாகவே ஆகாது. இன்னும் சிலரோ உடல் நிலை பாதிப்படைந்து இருப்பார்கள். மருத்துவர்கள் இவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றே கூறுவார்கள். இப்படியானவர்கள் உடல்நிலை தேறி பழைய படி நல்லபடியாக இருக்க இந்த மந்திரத்தை ஜெபித்தால் போதும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன மந்திரம் எப்படி சொல்ல வேண்டும் என்பதையெல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

sakkarai-noi-kuriaya

மந்திரங்களை பொறுத்த வரையில் அதை சொல்ல சொல்ல தான் நமக்கு அதற்கான முழு பலனும் கிடைக்கும். ஏனென்றால் இதை நாம் தினமும் ஜெபிக்கும் போது நம் உடம்பில் இருக்கும் ஆரா சக்திகள் தூண்டப்படுகிறது. அதன் மூலம் நம்முள் இருக்கும் அனைத்து எதிர்மறைகளும் நீங்கி நம் மனம் நேர்மறை சிந்தனைக்கு ஆளாகும். அதே போல இந்த மந்திரத்தை நாம் ஜெபிக்கும் போது நம்முடைய உடல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்வு பெறுவதோடு தினமும் காலையில் இதை சொல்லும் பொழுது நம்முடைய ஆராசக்தி அதிகரித்து நம்மை நோக்கி எந்த பிரச்சனை வருவதாக இருந்தாலும் அதுவாகவே விலகி சென்று விடும் என்றும் சொல்லப்படுகிறது.

மரண பயம் நீங்கி நோய் நொடியின்றி வாழ சொல்ல வேண்டிய மந்திரம்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம்
உருவாருகமிவ பந்தனாத்
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம்

இந்த மந்திரத்தை நாம் காலையில் எழுந்தவுடன் படுக்கையில் இருந்து கிழக்கு நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். முதலில் சொல்ல ஆரம்பிக்கும் போதே மூன்று முறை இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். அதன் பிறகு நாட்கள் செல்ல செல்ல இந்த மந்திரத்தை 11 முறை சொல்ல வேண்டும். அதற்கு மேலும் இந்த மந்திரத்தை ஜெபிக்கலாம். இந்த மந்திரத்தை தவறாக உச்சரிக்க கூடாது எனவே இதை உச்சரிக்க முடிந்தால் சொல்லலாம் அல்லது யூட்யூபில் இந்த மந்திரத்தை ஓட விட்டு நாம் தியானத்தில் அமர்ந்து கேட்கலாம்.

sad1

இந்த மந்திரம் உடல் ஆரோக்கியத்தை சரி செய்யவும், உடலில் இருக்கும் தீராத வியாதிகளை எல்லாம் நீக்குவதற்கும் ஒரு சிலர் நோய்வாய்ப்படாமலே தனக்கு ஏதாவது ஒன்று நிகழ்ந்திருக்கும் நாம் இறந்து விடுவோம் என்பது போன்ற எண்ணத்தில் இருந்தாலும் அல்லது வேறு சில காரணங்களால் அவர்களுக்குள் இருக்கும் மரண பயத்தையும் விரட்டி அடிக்க கூடிய சக்தி வாய்ந்த மந்திரம்.

இதுவரை நீங்கள் மருத்துவர் கொடுத்த மருந்துகளை சாப்பிட்டும் எந்த பலனும் இல்லை என்ற சூழ்நிலையில் இருந்தாலும் இந்த மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது அது நிச்சயம் உங்களுக்கு நல்ல பலனை கொடுத்து சீக்கிரம் உங்கள் நோய்களிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தினமும் காமாட்சி அம்மன் விளக்கை இப்படி ஏற்றினால், கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போகும். வீட்டில் அஷ்ட லட்சுமி ஐஸ்வர்யமும் தாண்டவம் ஆடும்.

அதுமட்டுமின்றி இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வரும் போது எந்த ஒரு துன்பமும் உங்களை நெருங்காமல் காக்கும் அரண் போல இந்த மந்திரம் இருக்கும். எந்தத் துன்பம் உங்களை நோக்கி வந்தாலும் தானாகவே விலகி விடும் என்பதோடு வரும் பிரச்சனைகளை நீங்கள் சுலபமாக கையாளக் கூடிய தைரியத்தையும் தன்னம்பிக்கையும் இந்த மந்திரம் உங்களுக்கு கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

The post மரணப் படுக்கையில் இருப்பவரை கூட மறுபடியும் எழுந்து நடமாட வைக்க தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த மந்திரத்தை சொன்னாலே போதும். மரணம் பயத்தை போக்கி வளமாக வாழ வைக்கும் சக்தி வாய்ந்த மந்திரம். appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.