இந்த தீபத்தின் வாசம் பணத்தை அப்படியே இழுத்துக் கொண்டு வந்து உங்கள் கையில் கொடுத்து விடும். கெட்ட நேரத்தில் கூட கோடான கோடி நன்மை தரக்கூடிய தீப வழிபாடு.

ஜாதக கட்டத்தில் கிரகங்கள் சரியாக அமராத சமயத்தில், நமக்கு கெட்ட நேரம் நடப்பதாக ஜோதிடர்கள் சொல்லுவார்கள். நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளை பொறுத்துதான் நம்முடைய ஜாதக கட்டம் இருக்கும். நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப கெட்ட நேரம் நடக்கும் போது, நிச்சயமாக அதன் மூலம் நமக்கு பணக்கஷ்டம் வரும். ஆக நவகிரகங்களை சமாளிக்க கூடிய ஒரு வழிபாட்டை நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில தெய்வத்தை வழிபாடு செய்தால் நவகிரகங்கள் நம்மேல் கருணை காட்டும், என்று நமக்கு ஒரு பட்டியல் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

oil2

அந்த பட்டியலில் ஆஞ்சநேயரும் ஒருவர். உங்களுக்கு ஏழரை சனி நடந்தால் கூட நீங்கள் ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால், வரக்கூடிய துன்பங்கள் குறையும் என்று சொல்லுவார்கள். அப்பேர்பட்ட ஆஞ்சநேயரை நீங்கள் இந்த விளக்கு ஏற்றி வழிபாடு செய்து பாருங்கள். எவ்வளவு கஷ்டகாலத்திலும் உங்களுடைய கையில் பணம் இருக்கும். அந்த வழிபாடு என்ன என்பதை இப்போது நாம் தெரிந்து கொள்வோமா.

பணம் தரும் மல்லிகைப் பூ எண்ணெய் தீபம்:
Jasmine Pooja oil என்ற எண்ணெய் கடைகளில் நமக்கு கிடைக்கும். இது கொஞ்சம் விலை உயர்ந்தது தான். முடிந்தவர்கள் இந்த எண்ணெயை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வியாழக்கிழமை ஆஞ்சநேயர் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவிலுக்கு செல்லுங்கள். ஒரு மண் அகல் விளக்கில் இந்த ஜாஸ்மின் எண்ணெயை ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இந்த நறுமணத்திற்கு ஆஞ்சநேயர் உங்களுக்கு பல கோடி வரங்களை வழங்கி விடுவார்.

பொதுவாகவே மல்லிகைப்பூ வாசத்திற்கு பண வசியம் ஏற்படும் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு பண வசியத்தை ஏற்படுத்தக் கூடிய தீபம் தான் இது. இந்த தீபத்தை ஆஞ்சநேயருக்கு நீங்கள் ஏற்றுவதன் மூலம் உங்களுக்கு நவகிரகங்களால் பாதிப்புகள் இருந்தால் கூட, அதனால் பண பிரச்சனைகள் வராது. காரணம் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதன் மூலம் நவகிரகங்கள் நமக்கு பெரிய அளவில் கஷ்டத்தை கொடுக்காது. நவகிரகங்கள் ஆஞ்சநேயரின் கட்டளைகளுக்கு கட்டப்படக் கூடியவை. தொடர்ந்து ஒரு 11 வியாழக்கிழமைகள் இந்த தீபத்தை ஏற்றும் போதே உங்களுக்கு வாழ்வில் வரக்கூடிய நல்ல மாற்றங்கள் தெரியும். வியாழக்கிழமை காலை அல்லது மாலை எப்போது வேண்டும் என்றாலும் இந்த விளக்கை நீங்கள் ஏற்றிக் கொள்ளலாம்.

சில பேரால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருக்கும். வீட்டு பக்கத்தில் ஆஞ்சநேயர் சன்னிதானம் இருக்காது. இப்படிப்பட்டவர்கள் எல்லாம் வீட்டிலேயே பெருமாளின் படத்திற்கு முன்பு, ஆஞ்சநேயரை நினைத்து இந்த தீபத்தை ஏற்றலாம். உங்களுக்கு ரொம்பவும் பணகஷ்டமா. பணம் கொடுத்து இந்த ஜாஸ்மின் ஆயிலை வாங்கி அதில் விளக்கு ஏற்ற முடியாதா. ஒரே ஒருமுறை சின்ன பாட்டில் ஜாஸ்மின் ஆயிலை வாங்கிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் தொல்லையால் தினம் தினம் அவதிப்படுபவர்கள் கையில் கட்டும் கருப்பு கயிறை இப்படி பயன்படுத்தினால், கழுத்தை நெரிக்கும் கடன் சுமையும் காணாமல் போகும்.

மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றிவிட்டு, அதில் இரண்டு மூன்று சொட்டு இந்த ஜாஸ்மின் ஆயிலை கலந்து திரி போட்டு கூட தீபம் ஏற்றலாம். அதனால் எந்த ஒரு தவறும் கிடையாது. எந்த சூழ்நிலையிலும் வரக்கூடிய பணக்கஷ்டத்திலிருந்து தப்பிக்க ஆன்மீகம் சொல்லும் எளிமையான இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

The post இந்த தீபத்தின் வாசம் பணத்தை அப்படியே இழுத்துக் கொண்டு வந்து உங்கள் கையில் கொடுத்து விடும். கெட்ட நேரத்தில் கூட கோடான கோடி நன்மை தரக்கூடிய தீப வழிபாடு. appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.