தோனிக்கு அடுதது சென்னை அணிக்கு இவர்தான் கேப்டன்- சுரேஷ் ரேய்னா நம்பிக்கை


ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த கேப்டனாக இளம் வீரரை சுரேஷ் ரெய்னா பரிந்துரைத்துள்ளார்.
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த  ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச்31 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதற்காக வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனனர்.  இத்ல், முதல் போட்டியில் நடப்பு சேம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது.

தற்போது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினன்ர் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இத்தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என தகவல் வெளியாகும் நிலையில், வலுவான சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில்,சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ‘’தோனிக்குப் பதில் அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் ஏற்பார் என நம்புகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை அணியில் அறிமுகமான ருதுராஜ். சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு தொடரில் அவர் அதிக ரன்கள் (1 சதம், 4 அரைசதங்கள்) அடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.