“டி.ராஜேந்தர் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்” - ‘பத்து தல’ மேடையில் ஏ.ஆர் ரஹ்மான்

“டி.ராஜேந்தர் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்” என ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “பத்து தல படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டது சிம்புவுக்காக தான். மற்றொரு காரணம் ஓபிலி கிருஷ்ணா. அவரிடம் ஒரு தனித்துவ இசை ஆர்வம் இருக்கிறது. படத்தில் வரும் ‘அக்கறையில’ பாடல் சிம்பு பாட வேண்டியது. அவர் தாய்லாந்து சென்றதால் அந்த பாடலை நானே பாடிவிட்டேன். டி.ராஜேந்தர் இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.