“சலிப்பை ஏற்படுத்தும் ஒருநாள் தொடர்.. இந்த மாற்றங்கள் கண்டிப்பாக வேண்டும்”…, சச்சின் டெண்டுல்கர் ஓபன் டாக்!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று முடிந்துள்ள நிலையில், ஒருநாள் தொடரில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து சச்சின் டெண்டுல்கர் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்:

இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவனம் செலுத்தி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி குறித்தும் ஒருநாள் தொடரில் ஏற்பட வேண்டிய மாற்றம் குறித்தும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

டிவிட்டர் :  Enewz Tamil ட்விட்டர்

அதாவது, ஒருநாள் போட்டிகளானது, சமீபகாலமாக சுவாரசிய தன்மையை இழந்து வருகிறது. இதனால், இந்த வகை தொடர்களில் பல மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, 50 ஓவர்களை கொண்ட இந்த வகை போட்டிகளை, 3 இன்னிங்ஸுகளாக பிரிக்கலாம். அதாவது, ஒவ்வொரு 25 ஓவர் முடிவில், பேட்டிங் மற்றும் பவுலிங் தன்மைகளை மாற்றி அமைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

IPL 2023: RCB அணியில் இணைந்த நியூசிலாந்து ஆல் ரவுண்டர்…, வில் ஜாக்ஸுக்கு மாற்று வீரரை அறிவித்த நிர்வாகம்!!

மேலும், 50 ஓவரில், 15 முதல் 40 ஓவர்களுக்கு இடையிலான போட்டி நேரத்தில், ஆட்டத்தின் வேகம் குறைந்து சலிப்பு தன்மையை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டு, ஒருநாள் தொடரில் இருந்து மட்டும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக அறிவித்த போது, ஒரு நாள் தொடர்களில் பல மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற கருத்து வலுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

The post “சலிப்பை ஏற்படுத்தும் ஒருநாள் தொடர்.. இந்த மாற்றங்கள் கண்டிப்பாக வேண்டும்”…, சச்சின் டெண்டுல்கர் ஓபன் டாக்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.