பல நாள் விற்க்காத சொத்தைக் கூட, பல மடங்கு லாபத்தோடு விற்க இந்த ஒரு விளக்கு ஏற்றினாலே போதும்.

சொத்து இருப்பவருக்கும் பிரச்சனை. சொத்து இல்லாதவருக்கும் பிரச்சனை. புதியதாக சொத்து வாங்குவதில் தான் பெரிய கஷ்டம் இருக்கிறது. பணம் சேர்க்க முடியவில்லை என்றால், இருக்கின்ற சொத்தை விற்பதிலும் பல பிரச்சனைகள். சில பேருக்கு பூர்வீக சொத்து இருக்கும். அந்த சொத்து இருப்பதை நம்பி, கடன் வாங்கி தொழில் செய்து இருப்பார்கள். கெட்ட நேரம் தொழிலில் பெரிய நஷ்டம் வந்து இருக்கும். சரி, வந்த நஷ்டத்தை சரி செய்ய, இருக்கின்ற சொத்தை விற்கலாம் என்று நினைத்தால், அந்த நேரம் பார்த்து நம்முடைய சொத்தை அடிமாட்டு விலைக்கு கேட்பார்கள். இந்த சொத்தை விற்றால் தான் அவர்களுடைய மானமே காப்பாற்றப்படும். அந்த அளவுக்கு சூழ்நிலை மோசமாக இருப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

muruga

சில பேருக்கு, சில சொத்து கைக்கு வந்த நேரம் ரொம்பவும் துரதிஷ்டமாக இருக்கும். இந்த சொத்தை எப்படியாவது விற்றால் போதும் என்ற நிலைமைக்கு தள்ளப்படுவார்கள். ஆனால், அந்த சொத்தை வாங்குவதற்கு ஒரு ஈ காக்கா கூட வரவே வராது. சொத்தை விற்கவும் முடியாமல், வைத்து கொள்ளவும் முடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கும் ஒரு எளிமையான ஆன்மீகம் சார்ந்த தீர்வைதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றேன்.

விற்காத சொத்தை லாபத்தோடு விற்க முருகன் பரிகாரம்:
விற்காத இடத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவு மண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை இந்த மண்ணை எடுத்துக் கொண்டு முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஒரு சிறிய வாழை இலையில் இந்த மண்ணை கொஞ்சமாக பரப்பி வையுங்கள். அதன் மேலே இன்னொரு வாழை இலையைப் போட்டு, அதன் மேலே மண் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றி, முருகப்பெருமானை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் எடுத்துச் சென்ற மண்ணிலிருந்து ஒரு சிறிய அளவு மண்ணை உங்களுடைய உள்ளங்கையில் வைத்துக் கொண்டு, ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டு முருகனின் பிரகாரத்தை ஆறு முறை வலம் வர வேண்டும். உங்கள் கையில் இருக்கும் மண்ணை ஒரு பேப்பரில் வைத்து, மடித்து உங்களுடனே எடுத்துச் செல்லுங்கள். விற்காத பூமியில் இந்த மண்ணை கொண்டு போய் தூவி விடுங்கள். 6 வாரம் இதே போல் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால், உங்களுடைய விற்காத நிலம் விற்று விடும். விற்காத வீடு அல்லது விற்காத வேறு ஏதாவது சொத்து இருந்தால் கூட அதற்கும் இதே போல பரிகாரம் தான். விற்காத வீடாக இருந்தால் அந்த வீட்டின் வெளிப்பகுதியில் இருந்து சிறிதளவு மண்ணை எடுத்துக் கொண்டு போய் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

சில பேரு சின்ன சின்ன அளவில் இருக்கும் வண்டி வாகனம் போன்றவற்றைக் கூட விற்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். முடங்கிப் போன தொழில் செய்த இடத்தில் இருக்கும் இயந்திரங்கள் எல்லாம் விற்காமல் இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைக்கும் இதேபோல பரிகாரத்தை செய்யலாம். ஆறு வாரம் தொடர்ந்து, இதேபோல பிரார்த்தனை செய்து வந்தால் விற்காத சின்ன சின்ன பொருட்கள் மிஷின்கள் கூட சீக்கிரம் விற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: காலையில் எழுந்ததும் முதல் வேலையாக இந்த பொருட்களை மட்டும் பார்த்தால் பணம் பல வழிகளில் இருந்தும் வந்து பாக்கெட்டை நிரப்புமாம்!

நிலம் வீடு வண்டி வாங்க வேண்டும் என்றாலும் அந்த முருகப்பெருமானின் காலை தான் பற்றிக்கொள்ள வேண்டும். வாங்கிய பொருட்கள் விற்கவில்லை என்றாலும் அந்த முருகப்பெருமானின் பாதங்களை தான் பற்றிக்கொள்ள வேண்டும். அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. ஆகவே நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் கை மேல் பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

The post பல நாள் விற்க்காத சொத்தைக் கூட, பல மடங்கு லாபத்தோடு விற்க இந்த ஒரு விளக்கு ஏற்றினாலே போதும். appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.