ரசிகர்களை மகிழ்வித்ததா நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டிரைலர்? 

நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படத்திலிருந்து வடிவேலு பாடிய 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.  இதையும் படிக்க- காஜல் அகர்வால் படத்துக்கு 7 இசையமைப்பாளர்கள்!​ ஆனால் படத்தின் டிரைலரில் காமெடி அம்சம் எதுவும் இடம்பெறவில்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்தப் படம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.