சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வா?

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் விரைவில் ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

 

இந்தியாவுக்கு உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற இலக்கை நோக்கி கடுமையாக உழைத்தேன். எங்களது முயற்சியின் கடைசி கட்டத்தில் வீழ்ந்தோம். எனது சக வீரர்கள் பயிற்சியாளர்கள் நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி என சூசகமாக தனது ஓய்வை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்

 

இருப்பினும் அதிகாரபூர்வமாக இன்னும் ஒரு சில நாட்களில் தினேஷ் கார்த்தி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இந்தியாவுக்காக பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.