தமிழ்சினிமாவில் அரைசதத்தில் வெளுத்து வாங்கிய நாயகர்கள் யார் யார் என்று பார்க்கலாமா?

இப்போதெல்லாம் நடிகர்கள் 50 படங்கள் நடிப்பதற்குள் போதும்டா சாமி என்ற அளவிற்கு வந்து விடுகிறார்கள். எந்தப்படம் ஓடுகிறது என்பது அவர்களுக்கே தெரிவதில்லை. 10 நாள்கள் ஓடினாலே மாபெரும் வெற்றிப்படமாகக் கொண்டாடுகிறார்கள்.

அந்தக்காலத்தில் நடிகர்கள் 200 படங்களுக்கு மேல் சாதாரணமாக நடித்து வெற்றியும் கண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அன்று முதல் இன்று வரை உள்ள முன்னணி நடிகர்களுக்கு 50வது படம் கைகொடுத்ததா என்று பார்க்கலாம்.

நடிகர்களின் 100வது படங்கள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் 50வது படங்கள் ஜெயித்ததா என்று தெரியாது. அதுபற்றி இப்போது பார்ப்போம்.

எம்ஜிஆரின் 50வது படம் நல்லவன் வாழ்வான். இது 1961ல் வெளியானது. பெரிய தோல்விப்படம். சிவாஜியின் 50வது படம் சாரங்கதாரா. 1958ல் வெளியானது. செம ஹிட்.

sarangathara

ரஜினிகாந்தின் 50வது படம் டைகர்  தெலுங்கு படம் ஹிட்டானது.
கமலின் 50வது படம் மோகம் முப்பது வருஷம். எஸ்பி.முத்துராமன் இயக்கியது. மிகப்பெரும் ஹிட். இளையதிலகம் பிரபுவின் 50வது படம் பூ பூவா வந்திருக்கு. 1987ல் ரிலீஸானது. அந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் மூவி இதுதான். புரட்சித்தமிழன் சத்யராஜின் படத்தில் 50வது படம் அர்த்தமுள்ள ஆசைகள். கார்த்திக் உடன் இணைந்து நடித்தார்.

சரத்குமார் 1993ல் நடித்த தசரதன் படம் 50வது இது பிளாப் மூவி.முரளியின் 50வது படம் என்றும் அன்புடன். இது 1992ல் வெளியானது. இதுவும் ஹிட் படம் தான். ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் 50வது படம் கூலி. 1988ல் வெளியானது.

விஜயின் 50வது படம் சுறா. இது பிளாப் தான். அஜீத்குமாருக்கு 50வது படம் மங்காத்தா. இது பிளாக்பஸ்டர் படம். 2011ல் வெளியானது. அடுத்து விக்ரம் நடித்த ஐ படம் அவருக்கு 50வது படம். 2015ல் வெளியானது. உலகளவில் 200 கோடி வரை வசூலித்தது.

neethiyin marupakkam

கேப்டன் விஜயகாந்த் நடித்த நீதியின் மறுபக்கம் தான் 50வது படம். இது பெரிய வெற்றி பெற்ற படம். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படம். நவரச நாயகன் கார்த்திக் 1987ல் பரிசம் போட்டாச்சு என்ற படம். இதுதான் அவருக்கு 50வது படம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.