நான் அதிபரானப் பின் வரலாற்றிலேயே முதன்முறையாக!-தன்னை தானே பாராட்டிக்கொள்ளும் ட்ரம்ப்-ன் 25 Points
2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பொறுப்பை ஏற்றார் ட்ரம்ப்.
அப்போதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அமெரிக்காவை மட்டுமல்ல... உலக நாடுகளையே அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறார் அவர்.
தற்போது தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில், 2025-26 ஆண்டிற்கான சாதனை என்று 25 விஷயங்களை அவரே பட்டியலிட்டிருக்கிறார். அந்தப் பட்டியல் இதோ...
1. வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பான அமெரிக்க எல்லையை உறுதிசெய்துள்ளோம். கடந்த 16 மாதங்களில் ஒரு சட்டவிரோதக் குடியேறி கூட அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படவில்லை.
2. ஆபத்தான குற்றப்பின்னணி கொண்ட அந்நியர்களை வெளியேற்ற ‘லேக்கன் ரிலே சட்டத்தில்’ (Laken Riley Act) கையெழுத்திட்டுள்ளோம்.
3. கொலைகள் நடப்பது வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. 1900-ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.
4. ‘கிரேட் பிக் பியூட்டிஃபுல் பில்’ மூலம் அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய வரிவிலக்குகளைக் கொண்டுவந்துள்ளோம். இதில் டிப்ஸ் தொகைகளுக்கான வரி விலக்கு, கூடுதல் நேர வேலைக்கான வரி விலக்கு மற்றும் முதியோருக்கான சமூகப் பாதுகாப்புப் பணிக்கான வரி விலக்கு ஆகியவை அடங்கும்.
5. அமெரிக்காவில் 19.2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கான உறுதியைப் பெற்றுள்ளோம்.
6. அமெரிக்க உற்பத்தியை மீட்டெடுக்க வரலாற்றுச் சிறப்புமிக்க சுங்கவரிகளை விதித்துள்ளோம். வெளிநாட்டுச் செம்பு, அலுமினியம் மற்றும் எஃகு மீது 50% சுங்கவரியும், வெளிநாட்டு வாகனங்கள் மீது 25% சுங்கவரியும் விதிக்கப்பட்டுள்ளது.
7. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பங்குச்சந்தை இதுவரை இல்லாத அளவுக்கு 80 முறை வரலாற்றுச் சாதனை உச்சங்களைத் தொட்டுள்ளது.
8. நமது நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, இன்று அதிக எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் வேலையில் உள்ளனர்.
9. அமெரிக்க ஆயுதப் படைகளில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 1 டிரில்லியன் டாலர், அடுத்த ஆண்டில் 1.5 டிரில்லியன் டாலர் ஒதுக்க இலக்கு நிர்ணயம்.
10. ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ மூலம் வெனிசுலாவின் சட்டவிரோத சர்வாதிகாரி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தியுள்ளோம்.
11. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் பெறக்கூடாது என்பதை உறுதிசெய்ய, ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ மற்றும் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ மூலம் அந்நாட்டின் அணுசெறிவூட்டல் திறனை முற்றிலுமாக அழித்தொழித்துள்ளோம்.

12. நமது பிராந்தியத்தில் இயங்கி வரும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை ஒழிக்கப் பல வெற்றிகரமான ராணுவத் தாக்குதல்களை நடத்தினோம். எல்லை வழியாக ஆபத்தான ஃபென்டானில் ஊடுருவலை வரலாற்றுச் சாதனையாக 60% வரை குறைத்துள்ளோம்.
13. பல விநியோக மருந்துகளின் விலையை 300, 400, 500 மற்றும் 600 சதவீதம் வரை குறைப்பதற்காக ‘மிகவும் சலுகை பெற்ற நாடு’ ஒப்பந்தங்களை உறுதிசெய்துள்ளோம்.
14. ‘கிரீன் நியூ ஸ்கேம்’ போலி நாடகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்து, கச்சா எண்ணெய் அகழ்வாராய்ச்சியைத் தீவிரப்படுத்தியுள்ளோம்.
15. மின்சார வாகன கட்டாய விதிமுறைகள் மற்றும் அமெரிக்க வாகனத் துறைக்கு முட்டுக்கட்டையாக இருந்த பிற கடுமையான கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளோம்.
16. அமெரிக்க ஏற்றுமதி வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த ஒரு ஆண்டில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 2.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்யவுள்ளோம்.
17. கூட்டாட்சி அரசு மற்றும் தனியார் துறைகளில் பாகுபாடு காட்டும் அனைத்து ‘பன்முகத்தன்மை, சமத்துவம், உள்ளடக்கம்’ கொள்கைகளையும் முழுமையாக ஒழித்துள்ளோம்.
18. பெண்கள் விளையாடும் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் பங்கேற்பதற்குத் தடை விதித்துள்ளோம்.
19. நமது பள்ளிகளில் திருநங்கை சித்தாந்தம் மற்றும் விமர்சன இனக் கோட்பாடு கற்பிக்கப்படுவதற்குத் தடை விதித்துள்ளோம்.
20. ‘ட்ரம்ப் கணக்குகள்’ மூலம் அனைத்து பிறந்த குழந்தைகளுக்கும் $1,000 தொடக்கத் தொகையுடன், அனைத்து அமெரிக்கக் குழந்தைகளுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்ட முதலீட்டுக் கணக்குகள்.
21. முதல் 12 மாதங்களிலேயே காசா போர் உட்பட 8 தீவிர போர்களை வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தங்கள் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளோம்.


22. உயிருடனும் உயிரிழந்தும் இருந்த அனைத்துப் பிணைக்கைதிகளையும் மீட்டு அவர்களின் குடும்பங்களிடம் சேர்த்துள்ளோம்.
23. சோமாலியா மற்றும் பிற ஆபத்தான இடங்கள் உட்பட அனைத்து அகதிகள் சேர்க்கையையும் அமெரிக்காவிற்குள் நிறுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
24. வாஷிங்டன் டி.சி., மெம்பிஸ் மற்றும் நியூ ஓர்லியன்ஸ் ஆகிய இடங்களில் சட்டத்தையும் ஒழுங்கையும் மீட்டெடுக்க தேசியப் பாதுகாப்புப் படைப்பிரிவுகளைப் பயன்படுத்தியுள்ளோம்.
25. ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றியுள்ளோம்.
இந்தப் பட்டியல் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீங்க; கமெண்ட் பண்ணுங்க!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


