N Chandrasekaran Vs Noel Tata: நோயல் டாடா ஏன் சந்திரசேகரன் பதவி நீட்டிப்பை எதிர்க்கிறார்?| Tata Sons

இந்தியாவின் தவிர்க்க முடியாத பெரு நிறுவனங்களில் ஒன்று - டாடா குழுமம்.

அந்த டாடா குழுமத்தின் மிக முக்கியமான ஒன்று - டாடா சன்ஸ்.

அந்த நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரனை நீட்டிப்பது குறித்த பிரச்னைதான் இப்போது டாடா குழுமத்தில் வெடித்திருக்கிறது.

டாடா குடும்பத்தைச் சேராத டாடா சன்ஸ் நிறுவனத்தின் முதல் தலைவராக என்.சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பார்சி இனத்தைச் சேராத டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் இவரே.

என்.சந்திரசேகரன்

என்.சந்திரசேகரனின் பயணம்

1987-ஆம் ஆண்டு இன்டர்னாக டாடா குழுமத்தில் தொடங்கிய என்.சந்திரசேகரனின் பயணம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் வரை நீண்டிருக்கிறது.

2017-ஆம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரானார் இவர். இவருக்கு எப்போதுமே ரத்தன் டாடாவின் குட் புக்கில் இடமுண்டு.

இவர் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரானதும் டிசிஎஸ் வளர்ச்சி முதல் பல டாடா நிறுவனங்கள் லாபமானவை. டாடா நிறுவனத்தை விட்டுச் சென்ற ஏர் இந்தியா திரும்பத் தாய் குழுமத்திற்கே வந்து சேர்ந்தது.

ஏன் பதவிக்கு போட்டியிடவில்லை?

என்.சந்திரசேகரனின் பதவிக் காலம் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு முடிவடைகிறது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம், “என்னுடைய பதவி நீட்டிப்பிற்கு டாடா சன்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவர் ஆதரவு தெரிவிக்கவில்லை.

ஏகோபித்த ஆதரவு இல்லாத நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடமாட்டேன்” என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

என்.சந்திரசேகரன் கூறும் அந்த ஒருவர் டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடாதான் என்று தெரியவருகிறது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் கிட்டத்தட்ட 66 சதவீத பங்குகள் டாடா அறக்கட்டளையிடம்தான் இருக்கிறது. இது என்.சந்திரசேகரன் பதவி நீட்டிப்பு விஷயத்தில் நோயல் டாடாவின் கையை உயர்த்துகிறது.

நோயல் டாடா

நோயல் டாடாவிற்கு ஏன் பிடிக்கவில்லை?

டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பட்டியலிட வேண்டும் என்கிற முன்னெடுப்பை என்.சந்திரசேகரன் எடுக்கிறார். இது நோயல் டாடாவிற்குப் பிடிக்கவில்லை.

ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடும் போது, அதன் விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும். அது நோயல் டாடாவிற்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனம் இன்னமும் நஷ்டத்தில்தான் போகிறது. ஆனால், இன்னும் அந்த நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய முதலீட்டாளர்களிடம் நிதி கேட்டிருக்கிறார் என்.சந்திரசேகரன்.

ஏற்கெனவே நஷ்டத்தில் செல்லும் நிறுவனத்திற்கு நிதி எதற்கு என்பதும் நோயல் டாடாவின் கேள்வியாக இருக்கிறது.

இதனால்தான், நோயல் டாடா என்.சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பிற்குத் தடையாக இருக்கிறார்.

வாதம் vs வாதம்

நேற்று நடந்த டாடா சன்ஸ் போர்டு மீட்டிங்கில், பெரும்பான்மை வாக்குகளில் என்.சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு என்.சந்திரசேகரனும் ஒப்புக்கொண்டார்.

விவரமறிந்தவர்கள் கூறுகையில், என்.சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பு ஒருமித்ததாக இல்லாமல், பெரும்பான்மையாக இல்லாததற்குக் காரணம் நோயல் டாடாதான் என்று சொல்கிறார்கள்.

போர்டு மீட்டிங்கில் 4-1 வாக்குகளில் என்.சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பு உறுதியாகியுள்ளது. அந்த ஒன்று நோயல் டாடா உடையது என்று கூறப்படுகிறது.

டாடா சன்ஸ்
டாடா சன்ஸ்

இதனால்தான், என்.சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பை நோயல் டாடா ஒத்துக்கொள்ளவில்லை. இதனால்தான், இதை எதிர்த்து அறிக்கைகளை வெளியிடுகிறார்.

டாடா சன்ஸ் நிறுவனம் போர்டு உறுப்பினர்கள் நாங்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறோம்... எங்கள் முடிவுதான் இறுதியாக வேண்டும் என்று வாதிடுகிறது.

நோயல் டாடாவோ டாடா சன்ஸ் தலைவர் நியமனத்தில் டாடா அறக்கட்டளைக்குச் சிறப்பு அதிகாரம் உள்ளது. அதனால், டாடா அறக்கட்டளை முடிவே முக்கியமானது என்று சொல்கிறார்.

இந்தப் பிரச்னை முடியாமல் நீடித்தால், இது பங்குதாரர்கள், நீதிமன்றத்திடம் கூடச் செல்லலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.