மும்பை அணியில் இனி ரோஹித் சர்மா இல்லையா? என்ன நடந்தது?

ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக, அதன் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, ரோஹித் சர்மாவுக்கு தசைநார் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பாதியிலேயே வெளியேறினார் . இந்தப் போட்டியில் மும்பை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 

இந்த சீசனில் ரோஹித் சர்மா 4 போட்டிகளில் 137 ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் உள்ளார். அவரது சராசரி 45.67 மற்றும் ஸ்டிரைக் ரேட் 165.06 ஆகும். ஏப்ரல் 16 அன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஏப்ரல் 20 அன்று குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள முக்கிய போட்டிகளில் ரோஹித் இல்லாதது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

ஏற்கனவே பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் எடுக்க திணறி வரும் சூழலில், பேட்டிங்கிலும் ரோஹித் விலகியிருப்பது அணிக்கு கூடுதல் நெருக்கடியை தந்துள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் போட்டியில் வென்ற மும்பை அணி, தற்போது தொடர் தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் சரிந்து வருகிறது. ரோஹித் சர்மாவின் அனுபவம் இல்லாத நிலையில், மும்பை இந்தியன்ஸ் மீண்டெழுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.