மீண்டும் மீண்டுமா!.. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும்!.. துரந்தர் 2-வாக மாறிய பிரேமலதா!...


2023 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது தேமுதிக. விஜயகாந்த் உயிரோடு இருந்தவரை கலைஞர் கருணாநிதியையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது அவர் இல்லாத நிலையில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் பிரேமலதா. அதுவும் 10 சீட் மற்றும் தனது சகோதரர் சுதீஷுக்கு ராஜ்யசபா சீட் என கண்டிஷன் போட்டு சேர்ந்தார்.

இந்நிலையில்தான், திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் என எல்லோரும் இந்த மேடையில் பேசிய பிரேமலதா ‘தமிழநாட்டில் அண்ணன் ஸ்டாலின் ஆட்சியில் பெண்கள் மீதான் பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் அதிகமாக புழங்குகிறது.. இந்த இரண்டு பிரச்சனைதான் இருக்கு. வேறு எந்த பிரச்சனையும் இல்லை’ என பேசி திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதையடுத்து துரந்தர் பட ஹீரோ போல திமுகவில் கூட்டணியில் இருந்துகொண்டே உளவாளியாக பிரேமலதா செயல்படுகிறார் என நெட்டிசன்கள் நக்கலடித்தனர். ஒருபக்கம், திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவரே ஸ்டாலினை மேடையில் அருகே வைத்துக்கொண்டே உண்மையை சொல்லிவிட்டார் என கூறினார்கள்.

இந்நிலையில்தான், மீண்டும் அது போன்ற ஒரு இன்னொரு வேலையை செய்திருக்கிறார் பிரேமலதா. திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியை ஆதரித்து பிரச்சாரம் செய்த பிரேமலதா ‘திருப்பரங்குன்றத்தில் நிச்சயமாக முருகன் அருளால் தீபம் ஏற்றப்படும்.. இங்குள்ள மக்களின் வாழ்க்கையும் உயரும்.. கிருத்திகா தங்கபாண்டி மக்களின் வாழ்க்கையில் தீபம் ஏற்றுவார்’ என பேசியிருக்கிறார்
. இதையடுத்து ‘அக்கா நீங்க இருக்கிறது பாஜக கூட்டணி இல்ல.. திமுக கூட்டணி.. நல்லா யோசிச்சு பேசுங்க’ என அவரை பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

திருப்பங்குன்றத்தில் தீபம் ஏற்றவேண்டும் என்கிற பாஜகவின் நிலைப்பாட்டை திமுக கடுமையாக எதிர்க்கிறது.. திருப்பரங்குன்றத்தில் சிலர் தீபம் ஏற்று முயன்றபோது மத நல்லிணக்கத்தை காரணம் காட்டி திமுக அரசு காவல்துறையினரை கொண்டு அதை தடுத்தது.
அதோடு நீதிமன்றம் சொல்லியும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற திமுக அரசு அனுமதிக்கவில்லை.

ஆனால், இதுவெல்லாம் தெரிந்திருந்தும் அந்த கூட்டணியில் இருக்கும் பிரேமலதா ‘திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும்’ என பேசியிருப்பது திமுக கூட்டணியில் சலசலப்பை கிளப்பியிருக்கிறது.. இதையடுத்து ‘துரந்தர் 2 பிரேமலதா’ என பலரும் அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.