மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையின் போது அசைவ உணவு உண்பதற்கு எதிராகப் பாகேஸ்வர் பாபா தீரேந்திர சாஸ்திரி பேசிய பேச்சுக்கு வங்காளிகளிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளதோடு, அவருக்கு எதிராகக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியது தற்செயலாக நடந்தது என்ற பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ஜான் சீலியின் கருத்திற்கு மாறாக, அது திட்டமிடப்பட்டது என்றும் அதை முன்னெடுத்தவர் யார், அவரது பின்னணி குறித்தும் இந்தக் கட்டுரை பேசுகிறது.
கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கான சரியான சூழலோ அல்லது பொதுவான எதிரியோ இல்லாததால், மெக்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளான பாகிஸ்தானும் துருக்கியும் செளதி அரேபியா மீதான ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு எதிராகத் தங்கள் ராணுவத்தை உடனடியாகப் பயன்படுத்தாமல் அமைதி காக்கின்றன.
தங்களது இயற்கையான வாழ்விடத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இந்தியாவின் ஒடிசாவில் உள்ள ஒரு காட்டில் ஐந்து குட்டி ஒராங்குட்டான்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அங்கு எப்படி வந்தன என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஜான் டெர்னஸ் பொறுப்பேற்று இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மாற்றத்தை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனின் வயிற்றில் ஆணிகள், நகவெட்டி, நாணயங்கள் உள்பட 44 பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டு, சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன. அப்பொருட்கள் எப்படி சிறுவனின் வயிற்றுக்குள் சென்றன?