நல்லது செய்ய ஒரு ரூபாய் கூட விஜய் செலவு செய்யல!… ரசிகர்கள்கிட்டயே அரசியலா?..
சினிமா எப்போது வளர துவங்கியதோ அப்போது முதல் திரை நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது என்பது வாடிக்கையாகிவிட்டது.. ஆண்பாவம் பாடலில் வரும் அமெரிக்காவில் ஆட்சி அமைச்சதும் இந்த சினிமாதான் எனும் வசனத்திற்கு ஏற்ப அமெரிக்காவின் ரொனால்ட் ரீகனில் துவங்கி தமிழகத்தில் எம்.ஜி.ஆர் வரை பல நடிகர்களை அரசியலுக்கு ஏத்தி விட்டுள்ளது சினிமா.
வெகு காலமாக அரசியலுக்கு வர போகிறேன் என ரஜினிகாந்த் கூறி வந்த நிலையில் இறுதியாக அரசியலுக்கு வரவில்லை என கூறிவிட்டார். அதனையடுத்து நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான வேலையில் இறங்கியுள்ளார். ஏனெனில் மக்கள் மத்தியில் அரசியல் வாதிகளை விட அதிக பிரபலமானவர்கள் சினிமா பிரபலங்களே.
vijay1
விஜய் அரசியலுக்கு வருவதற்காக பல நன்மைகளை செய்து வருகிறார் என்பது பரவலான பேச்சாக உள்ளது. கோடைக்காலங்களில் நீர் மோர் வழங்குவது, இலவச அன்னதானம் வழங்குவது போன்ற நல்ல செயல்களை தமிழகத்தில் பல பகுதிகளில் விஜய்யின் ரசிகர்கள் செய்து வருகின்றனர்.
ஆனால் உண்மையில் இதற்கெல்லாம் விஜய்தான் நன்கொடை தருகிறாரா? என்கிற கேள்வி பலரிடம் இருந்து வருகிறது. இதுக்குறித்து சில அரசல் புரசலான செய்திகள் உலா வருகின்றன. அதாவது விஜய் ரசிகர் மன்றம் மூலமாக செய்யப்படும் விஷயங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள்தான் செலவு செய்வதாக கூறப்படுகிறது.
vijay
விஜய் கட்சி துவங்கியப்பிறகு அதில் பெரும் பதவியை பெறவேண்டும் என்பதால் ஒவ்வொரு ஊரிலும் விஜய் மக்கள் இயக்கத்தில் உயர் பதவியில் இருக்கும் நபர்கள் இந்த செலவுகளை கவனித்துக்கொள்வதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அவரை வச்சு படம் எடுக்க நினைச்சது தப்பு!.. தயாரிப்பு நிறுவனத்திற்கு வடிவேலு கொடுத்த தொல்லை…
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.