2027-ல் 200-க்கும் மேற்பட்ட AI நிறுவனங்களுக்கு ஆபத்து? எச்சரிக்கும் எலான் மஸ்க்
2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏ.ஐ.யின் வளர்ச்சியும் தாக்கமும் அதிகமாக இருந்தது.
ஆனால், பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, ஏ.ஐ.யின் ஆதிக்கம் உலகச் சந்தைகளில் இருந்து குறைந்து, போரின் தாக்கங்கள் தென்பட்டன… இன்னமும் தென்பட்டு வருகின்றன.
ஆனால், கடந்த சில நாள்களாக, ஏ.ஐ. சந்தை சரிவைச் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க-கனடா தொழிலதிபர் சாமத் பாலிஹாபிட்டியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவை க்ரோக்-ன் உரிமையாளர் எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.
சாமத் பாலிஹாபிட்டியாவின் பதிவு:
“மின்சார வசதியுடன் கூடிய டேட்டா சென்டர் நிலங்களை வைத்திருப்பவர் என்ற முறையில், தற்போதைய AI மற்றும் கிளவுட் சந்தையை ஆராயும்போது சில முக்கியமான சிக்கல்களும் வாய்ப்புகளும் தெரிகின்றன.
நியோகிளவுட்கள்: சிறிய கிளவுட் நிறுவனங்களிடம் போதுமான நிதியும் சரியான திட்டமிடலும் இல்லை. இதைத் தாண்டி, சில நிறுவனங்கள் மட்டும் இதில் சிறப்பாகச் செயல்படுகின்றன.
(நியோகிளவுட்கள் என்பவை அமேசான் (AWS), மைக்ரோசாஃப்ட் (Azure), கூகுள் (Google Cloud) போன்ற பாரம்பர்ய ஹைப்பர்ஸ்கேலர்களை விட முற்றிலும் வேறுபட்டு, குறிப்பிட்ட சிறப்புத் தேவைகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட புதிய தலைமுறை கிளவுட் சேவை நிறுவனங்கள் ஆகும்.)
ஹைப்பர்ஸ்கேலர்கள்: இவை அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளுடனும், மெதுவாகவும் இயங்குகின்றன. ஒரு சிறிய ஒப்பந்தத்திற்கே 3 மாதங்கள் வரை எடுத்துக்கொள்கின்றன.
எங்களைப் போன்ற சுறுசுறுப்பான நிறுவனங்கள் விரைவாகச் செயல்பட்டு இடங்களைக் கைப்பற்றுவது, எதிர்காலத்தில் பெரிய போட்டியாக மாறும்.
திட்டங்களில் தாமதம்: ஏற்கெனவே தொடங்கி நிலுவையில் இருக்கும் டேட்டா சென்டர் திட்டங்கள் தாமதமாவதால், 2027-ஆம் ஆண்டில் மிகப்பெரிய நெருக்கடி உருவாகும்.
திட்டங்கள் தாமதமாகும்போது, பெரிய கிளவுட் நிறுவனங்கள் தங்களுக்கு வரும் கணினித் திறனைத் தங்களது சொந்தத் தேவைகளுக்கே முதலில் பயன்படுத்திக்கொள்வார்கள்.
பிற ஏ.ஐ. மாடல் நிறுவனங்களுக்குத் தர மறுப்பார்கள் அல்லது தங்களிடமே பிற ஏ.ஐ. மாடல் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை வரவழைத்து அதிகக் கட்டணத்தை வசூலிப்பார்கள்.

2027-ஆம் ஆண்டில்…
2027-ஆம் ஆண்டில், நாம் நினைப்பதை விட மிக அதிக அளவிலான கணினித் திறன்கள் (GPUs / Data Center Power) பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும்.
பல கோடிகள் செலவழித்து வாங்கப்பட்ட தொழில்நுட்பக் கருவிகள், தங்களுக்கு ஆன முதலீட்டுச் செலவை விடக் குறைந்த வருமானத்தையே தரும் அல்லது பயன்பாடின்றித் தூசி படிந்து கிடக்கும்.
சந்தையில் உள்ள ஒரே ஒரு முன்னணி நிறுவனத்தைத் தவிர, மற்ற அனைத்து AI நிறுவனங்கள், ஹைப்பர்ஸ்கேலர்கள் மற்றும் நியோகிளவுட்களுக்கு இது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
இதில் யாருக்கு லாபம்?
இந்தக் குழப்பத்திலும் நெருக்கடியிலும் 2 அமைப்புகளுக்கு மட்டுமே மிகப்பெரிய வெற்றி…
1. தேவையில்லாத சட்டத் தடைகள் இல்லாமல், வேகமாக உள்கட்டமைப்பை உருவாக்கக் கூடிய பெரிய நிறுவனங்கள்,
2. அவர்களுக்குத் தேவையான நிதி மற்றும் நில வசதிகளை உடனுக்குடன் தந்து உதவும் சுறுசுறுப்பான பின்னணி நிறுவனங்கள்.”
எலான் மஸ்க் பதிவு
இந்தப் பதிவைப் பகிர்ந்து எலான் மஸ்க், “கடந்த சில வாரங்களாக, ஏ.ஐ. டேட்டா சென்டர்களைத் தவிர்த்து, சொந்தமாக நிலையான வருமானம் இல்லாத நிறுவனங்களுக்குக் கடன் கொடுக்க வங்கிகளும் நிதி நிறுவனங்களும் மறுத்து வருகின்றன.
As someone with a portfolio of energized land assets here is what I am seeing: 1. Neoclouds are disorganized and poorly capitalized. Some are definitely better than others however. 2. Hyperscalers are intractable, bureaucratic organizations that take 3 months to do an NDA and want 18mo escrow periods. We built our portfolio by competing against these terms because of our speed and simplicity. The more future assets orgs like ours win, the bigger the problem for the hyperscalers downstream (see 3). 3. There are delays in the existing pipeline that will catch people off guard in 2027. Hyperacalers will (obviously) react by focusing on their own internal compute needs over any third party. If the third party is a model company, they will tell them to go through their model router where they will also take a non-trivial vig. Them telling Ant they have no compute for them (rumored in Ant’s S-1) if true is a huge tell that this is already happening. All of this is to say that it does look like there will be a lot of partially stranded compute and compute sitting in inventory in 2027 than is currently forecasted. This is bought and paid for but effectively underearning (below total cost of capital) or collecting dust. We see this as true for everyone - model companies, hyperscalers, neoclouds except ONE (you can guess which one). This dislocation will benefit two kinds of orgs: the non-bureaucratic big scalers who can build industrial scale quickly and the nimble, well capitalized players feeding them. 2027 will be a turbulent year because it will clear out a bunch of wrong/bad bets. It will also be a consolidation year for a few.
— Chamath Palihapitiya (@chamath) October 25, 2026
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏ.ஐ. கணினித் திறனுக்காக (GPUs) $40 பில்லியன் டாலர் மிகப்பெரிய கடனை மிக எளிதாகப் பெற்றுவிட்டது. காரணம், கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்கு ஸ்டார்லிங்க் இணைய சேவை மற்றும் விண்கல ஏவுதல் மூலம் ஏற்கனவே நிலையான, வலுவான வருமானம் வருகிறது என்பதைக் காட்டினோம்.
ஆனால், எந்தவொரு சொந்த வருமானமும் இல்லாமல் வெறும் ஏ.ஐ. அலை மற்றும் GPU-க்களை மட்டும் நம்பி உருவான 200-க்கும் மேற்பட்ட நியோகிளவுட் நிறுவனங்கள் கடன் கிடைக்காமல் மிகக் கடுமையான நெருக்கடியைச் சந்திக்கப் போகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.
இதனால், 2027-ஆம் ஆண்டு ஏ.ஐ. தொழில்நுட்பமும், ஏ.ஐ. சந்தையும் சிறிய சறுக்கலைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


