Nepal Flood : 84 தமிழர்களை காணவில்லை - நேபாள வெள்ளம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே நேபாள வெள்ளத்தில் சிக்கியிருக்கும் தமிழர்கள் பற்றி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார்.
ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 26.08.2026 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அங்கிருக்கும் தமிழர்களை மீட்கும்பணிகளில் இறங்கினோம். 27.08.2026 அன்று முதல்வருடன் அவசர ஆலோசனை நடத்திவிட்டு தமிழக அமைச்சர்கள் குழு டெல்லி சென்றது.
அங்கே மீட்புப் பணிக்கான உதவி மையங்களும் அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு டெல்லி இல்லத்தின் ஆணையர் ஆஷிஸ் மிஸ்ரா காத்மண்டுவுக்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியாக அனுப்பி வைக்கப்பட்டார். தமிழக அமைச்சர்கள் குழு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஷ்ரியை சந்தித்து மீட்புப் பணிகள் குறித்து ஆலோசித்தது. முதற்கட்டமாக 21 தமிழர்கள் நேபாளத்திலிருந்து மீட்டு வரப்பட்டனர். அவர்களுக்கான பயண செலவை அரசே ஏற்றது.

305 தமிழர்கள் கைலாஷ் யாத்திரைக்கு சென்றது அறியப்பட்டது. அவர்களில் 220 பேர் பாதுகாப்பாக உள்ளனர். 84 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை. கும்பகோணம் நிறுவனம் மூலம் 57 பேர் நேபாளம் சென்றனர். அவர்களில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். குரோம்பேட்டை சேர்ந்த நிறுவனம் மூலம் 49 பேர் நேபாளம் சென்றிருந்தனர். இவர்களை தொடர்புகொள்ள தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேபாளம் சென்றவர்களின் உறவினர்கள் நேபாளம் செல்ல விரும்பினால் அரசே ஏற்பாடுகளை செய்துகொடுக்கும். மீட்புப் பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


