வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்துக்காக மலேசியா மற்றும் சீனாவைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
பயணத் திட்டத்திலிருந்து இந்தியா விலக்கப்பட்டதை ஒரு நேரடி செய்தியாகக் கருதுவது முன்கூட்டிய முடிவாக இருக்கலாம் என்றாலும், இது ஒரு ராஜீய சமநிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட இருந்த பல பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் விவாதப் பொருளானது. இதில் என்ன சர்ச்சை? திமுக - தவெக இந்த விவகாரத்தில் மோதிக் கொண்டது ஏன்?
13 வயதில் தடம் பதித்தது முதல் பல சாதனைகளைத் தகர்த்துள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு, பெல்ஃபாஸ்ட்டில் அயர்லாந்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெறும் முதலாவது டி20 சர்வதேசப் போட்டியில் இந்தியா அறிமுக வாய்ப்பை வழங்கக்கூடும்.
வெனிசுவேலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த 2 நிலநடுக்கங்களில் குறைந்தது 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் படையினர் தீவிரமாக உள்ளனர்.
ஆண்களின் கருவுறுதல் திறன் அதிகளவில் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தங்களது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, இன்ஃப்ளூயன்சர்களால் ஊக்குவிக்கப்படும் நிரூபிக்கப்படாத “தந்திரங்களை”ப் பயன்படுத்தும் ஆண்களை நாம் சந்திக்கிறோம்.
2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அணிகளின் வெற்றி, தோல்விகளைத் தாண்டி, யார் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.
இந்த முறை 48 அணிகள் பங்கேற்றுள்ளதால், ரவுண்ட் ஆஃப் 32 என்ற புதிய நாக்-அவுட் சுற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 28 அன்று தொடங்கும் இந்த நாக்-அவுட்
வெனிசுவேலாவில் அதிகமான தீவிரத்துடன், மிகக் குறைந்த ஆழத்தில் அடுத்தடுத்த சில வினாடி இடைவெளியில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 48 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவரும் சேரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் "20 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை" என்று நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிபிசியிடம் தெரிவித்தார். இதற்கு என்ன காரணம்?