இஸ்லாமாபாத்: காஷ்மீருக்கு 10 ஆயிரம் பயங்கரவாதிகளை ஹபீஸ் சயீத் அனுப்பியுள்ளார் என்று பாகிஸ்தானை சேர்ந்த மதகுருவான நசீர் மதானி கூறியுள்ளார். தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஒன்றின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நசீர் மதானி இவ்வாறு பேசியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை தூண்டிவிட்டு நாசவேலைகளில் ஈடுபட்டு