தென் மாவட்டங்களில் ஆடி மாத கொடை விழாக்களை அலங்கரிக்கும் மண் கலயங்களின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆடி மாதம் பெரும்பாலான அம்மன் மற்றும் சுடலைமாடன் கோயில்களில் கொடை விழாக்கள் நடைபெறுகின்றன. பெண்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மன் கோயில்களுக்கு ஆயிரங்கண் பானையை நேர்த்திக்கடனாக