சிங்கப்பூரில் பேருந்துகளில் உரக்க இசை ஒலிக்கசெய்வது, சாப்பிடுவது போன்ற இடையூறு விளைவிக்கும் செயல்களுக்கு 500 சிங்கப்பூர் டாலர்கள் வரையிலும், பேருந்து நிலையங்களை அழுக்குப்படுத்துவது போன்ற கடுமையான குற்றங்களுக்கு 5,000 சிங்கப்பூர் டாலர்கள் வரையிலும் அபராதம் விதிக்கும் புதிய சட்டப்பூர்வ விதிகளை நிலப் போக்குவரத்து வாரியம் அமல்படுத்தியுள்ளது.
இந்நோய் முதிய வயதில் மட்டுமே ஏற்படுகிறதா அல்லது இதன் தொடக்கம் பல தசாப்தங்களுக்கு முன்பே அமைந்துவிடுகிறதா? உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இதற்கான விடையைத் தொடர்ந்து தேடி வருகின்றனர். அல்சைமர்ஸ் நோயின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதற்கு 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பே, நோயாளியின் மூளையில் மாற்றங்கள் தொடங்கலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
உணவகங்கள் மற்றும் மதுபானக் கூடங்களின் பரிமாறுபவர்களாகப் பணியாற்றும் ரோபோக்கள் தற்போது டிப்ஸ் கேட்கத் தொடங்கியுள்ளது அமெரிக்காவில் விவாதப் பொருளாகியுள்ளது. இந்த டிப்ஸ்கள் ஊழியர்களுக்குச் செல்லாமல் நிறுவனங்களுக்கு நேரடியாகச் செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
கோதாவரிகானியில் இளம்பெண் அக்ஷிதா ராணி உயிரிழந்த வழக்கை காவல்துறை தீர்த்துள்ளது. அப்பெண்ணின் காதலனான நவீன், அவரைத் தனது காரில் அழைத்துச் சென்று, கட்டாயப்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்து கொலை செய்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை 3-வது நாளில் புதிய வேகம் எடுத்துள்ளது. இலங்கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. இதனுடன் பேட்மிண்டனில் பதக்கம் உறுதியானதுடன், குத்துச்சண்டை, கபடி உள்ளிட்ட போட்டிகளிலும் இந்திய வீரர்கள் அசத்தியுள்ளனர்.
அந்தக் காலக்கட்டத்தில் பெரும்பகுதி நான் அவரைப் பற்றி எழுதியுள்ளேன். நாங்கள் அடிக்கடி தொலைபேசியில் பேசியிருந்தாலும், நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களைப் பரிமாறிக்கொண்டிருந்தாலும், நாங்கள் இதுவரை நேரில் சந்தித்துக் கொண்டதில்லை.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் கோட்டப்புழா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தைப் போலவே மழையே பெய்யாத இடத்தில் வந்த திடீர் வெள்ளத்தில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது, கேரள ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் பெய்த கனமழையால் கேரள ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கா?
காவல்துறைத் தகவலின்படி, நிலுவையில் உள்ள ஊதியம் தொடர்பாக தனது முதலாளியுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, வினோத் சாவ்லே என்பவர் ஷ்யாம் சங்கினி ஜவுளிச் சந்தையில் தீ வைத்தார்; இந்தத் தீயை அணைக்க 14 மணிநேரம் ஆனது
இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்குத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரை கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. இந்த வழக்கில் 9 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பு என்ன?