வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் படிவம் 6 குறித்து உச்ச நீதிமன்றம் திங்களன்று ஒரு முக்கிய கருத்தைத் தெரிவித்தது. இதனை தேர்தல் ஆணையம் கூறியிருந்த கூற்றுடன் பலர் இதனைத் தொடர்புபடுத்திப் பேசுகின்றனர். முழு விவரம் என்ன? தேர்தல் ஆணையம் என்ன கூறியது? உச்ச நீதிமன்றம் என்ன கூறியது?
ஒரு கொசுவர்த்திச் சுருளில் இருந்து வெளியேறும் புகை, டஜன் கணக்கான சிகரெட்டுகளில் இருந்து வெளியேறும் புகைக்கு சமமாக இருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். இதனால் சுவாசம் மற்றும் தொண்டை தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதுடன், கடுமையான ஆஸ்துமா பாதிப்பு கூட ஏற்படலாம்.
"தற்போது இந்தியாவின் தொழில்துறை இறக்குமதிகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை சீனா வழங்குகிறது. 100-க்கும் மேற்பட்ட முக்கியமான பொருட்களுக்கு இந்தியா சீனாவையே சார்ந்துள்ளது. இந்தச் சமநிலையற்ற சூழல் மேலும் மோசமடைந்து வருகிறது"
கேரளத்தில் 20 ஆண்டுகள் பழமையான விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வழக்கின் பின்னணி என்ன?
தலைமைத் தேர்தல் ஆணையரை இடைநீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கும் மத்திய அரசுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டங்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக நீடித்தன. காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்தன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற சுமார் 500 மரண தண்டனைகளை செய்தியாளராக மைக்கேல் கிராசிக் நேரில் பதிவு செய்துள்ளார். 2018-ஆம் ஆண்டு அசோசியேட்டட் பிரஸ்ஸில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், அவர் மரண தண்டனைகள் குறித்த செய்திகளைத் தொடர்ந்து பதிவு செய்து வந்தார்.