ஆசிய விளையாட்டுப் போட்டியின் பத்தாவது நாள் தடகளப் போட்டிகளில் இந்தியா சிறப்பான பதக்க வேட்டையை நடத்தியுள்ளது. நீளம் தாண்டுதல், 1500 மீட்டர் ஓட்டம், ஈட்டி எறிதல், 400 மீட்டர் தடை ஓட்டம், 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் (Steeplechase) உள்ளிட்ட போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் வித்யா ராம்ராஜ் முறியடித்த 42 ஆண்டுகால தேசிய சாதனை மிக முக்கியமானதாக அம