உலக தடகளத்தின் மிகக் கடினமான பிரிவாகக் கருதப்படும் 10,000 மீட்டர் நீண்ட தூர ஓட்டத்தில் இந்தியா புதிய வரலாற்றை எழுதத் தொடங்கியுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் 10,000 மீட்டர் ஓட்டத்தில், இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த குல்வீர் சிங் (28), 10,000 மீட்டர் தூரத்தை 27:49.78 நிமிடங்களில் கடந்து இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்