சீனா மற்றும் துருக்கியின் உதவியுடன் பாகிஸ்தான் உருவாக்கியுள்ள புதிய வான் பாதுகாப்பு அமைப்பு, பிரம்மோஸ் போன்ற அதிவேகக் குரூஸ் ஏவுகணைகளைத் தடுக்கும் திறன் கொண்டது அல்ல; இருப்பினும் ட்ரோன் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இது ஒரு பல அடுக்கு பாதுகாப்பு அரணாகச் செயல்படுகிறது.
அன்றாட நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தான் எழுதிய ஜஹாங்கீர்நாமா நூலில், மதுபானம் மற்றும் பிற போதைப் பொருட்களை உட்கொண்ட சம்பவங்களை ஜஹாங்கீர் மறைக்கவில்லை.
தமிழகத்தில் முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி உட்பட 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 2 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்துள்ளது. மற்ற தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பது இதற்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மாயமான தமிழர்களை அடையாளம் காணும் பணிக்காக, தமிழகத்தில் இலவச டிஎன்ஏ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் சுற்றுலா நிறுவனம் மூலமாக நேபாளம் சென்ற 36 பேரின் உறவினர்கள் பலரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு டிஎன்ஏ மாதிரிகளை அளிப்பதற்காக வருகை தருகின்றனர்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தனியார்மயமாகிறதா என்ற விவாதம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோவைச் சேர்ந்த 9 தொழிலாளர் சங்கங்கள் இஸ்ரோ தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளது விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. என்ன நடக்கிறது?
உலகின் அதிக ஊதியம் பெறும் அரசியல் தலைவரான சிங்கப்பூர் பிரதமரின் ஊதியம் உட்பட, அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் பிற உயர் பதவியில் உள்ளவர்களின் ஆண்டு ஊதியத்தை உயர்த்தப் போவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
ஒரு பெண்ணின் வயிற்றில் 13 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் மற்றும் ஒரு மெழுகுவர்த்தி இருந்தன இவை அனைத்தும் ஒரு பெண்ணின் வயிற்றுக்குள் எப்படி சென்றன என்பதுதான் இங்கு கேள்வி.
பிரிட்டனைச் சேர்ந்த மைக்ரேன் அறக்கட்டளையின் (Migraine Trust) கூற்றுப்படி, உலகளவில் சுமார் ஏழு பேரில் ஒருவர் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர். அதாவது, 100 கோடிக்கும் அதிகமான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.