`விமானங்களின் எரிபொருள் மீதான VAT குறைப்பு; வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் - அமைச்சர் கீர்த்தனா

தமிழ்நாட்டில் விமான எரிபொருள் மீதான வாட் வரி 29 சதவிகிதமாக இருந்தது. இதைக் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விமான நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வந்தன. இந்த நிலையில், 29 சதவிகிதமாக இருந்த மதிப்புக் கூட்டு வரியை 16 சதவிகிதமாக குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. இது குறித்து விளக்கமளிக்கும் வகையில், தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாட்டின் வான்வழிப் போக்குவரத்துத் துறைக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்! சென்னைப் விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்களுக்கான விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (VAT) 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகக் குறைக்கிறோம்.

விமானம்

அதேபோல், தமிழ்நாட்டின் பிற விமான நிலையங்களில் இந்த வரியை வெறும் 1 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த வரிக்குறைப்பின் மூலம் விமானப் பயணத்தை சாமானியர்களுக்கும் எளியதாக மாற்றுவதோடு, நமது மண்டல விமான நிலையங்களின் போட்டியிடும் திறனையும் அதிகரிக்கும் தீர்க்கமான அடியை எடுத்து வைத்துள்ளோம். குறைந்த இயக்கச் செலவு காரணமாக, விமான நிறுவனங்கள் புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தவும், விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சென்னைக்கு அப்பால் உள்ள நகரங்களுக்கும் தங்களது சேவைகளை விரிவாக்கவும் முன்வரும்.

இது நமது நகரங்களுக்கிடையேயான இணைப்பை மேம்படுத்துவதோடு, சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்முனைவோருக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையின் கீழ், அதிக பகுதிகளை இணைக்கும், பொருளாதார ஆற்றலை வெளிக்கொணரும் மற்றும் தமிழ்நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு வலுவான வான்வழிப் போக்குவரத்து கட்டமைப்பை நாம் உருவாக்கி வருகிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.